பக்கம் எண் :

116

 நீதிநூல்
 
 போகவில்லையென்று கருதி நீண்ட பொழுதைச் சூதாகிய வாளினால் வெட்டுவர்.
 ஓதரு-சொல்ல முடியாத. விசை-விரைவு. மேதையர்-அறிவான் மிக்கவர். போது-பொழுது. பொறி-புண்ணியம்.
 3
 
அளவிலாத் தீமையை ஆற்றும் சூது
242
வளமலி நிடதநா டளிக்கு மாண்புசேர்
நளனையும் அலைவுசெய் நாசச் சூதுதான்
களவுபொய் சினம்பகை காம மியாவையும்
அளவறப் பயிற்றிடும் ஐயன் போலுமே.
 செழிப்புமிக்க நிடத நாட்டை யாண்ட சிறப்புப்பொருந்திய மன்னர்மன்னனாகிய நளனையும், சூது பெருந்துன்பம் எய்தும்படி செய்தது. அச் சூது களவு, பொய், சினம், பகை, காமம் முதலிய தீமைகளுக்கெல்லாம் தந்தையாகும்.
 வளம்-செழிப்பு. மாண்பு-சிறப்பு. அலைவு-துன்பம்.
 4
 மனைவி மாளினும் சூதன் மனமகிழ்ந்தாடுவான்
243
கவறினை யாடுவோன் காந்தை வீயினுஞ்
சவமதில் வழிசெலு மென்று தானெழான்
அவள்புனை தாலிபந் தயத்துக் காமென
உவகைபூத் தாடுவா னுயர்வு றானரோ.
 சூதாடுவோன் தன் அருமையான மனைவி மாண்டாலும் அச் சூதாட்டத்தினின்றும் எழுந்திரான். மேலும் அப்பிணம் இவ்வழிதானே வரும் என்றுங் கூறுவான். அம் மாட்டோ, அவள் தாலி சூதாடும் ஒட்டத்துக்கு ஆகும் என்று மனமகிழ்வான். ஒருகாலும் மேன்மை அடையான்.
  கவறு-சூது. காந்தை-மனைவி. வீதல்-சாதல். பந்தயம்-ஒட்டம். உவகை-மனமகிழ்வு. உயர்வு-மேன்மை.
 5
வேறு
அளவில் ஆசையாற் பொருளெலாம் சூதிலிழப்பர்
244
வட்ட மாநில மீதுமன் னார்விடம்
இட்ட பாலை யினிதளித் தாலெனக்
கட்ட மேவுங் கழகத்தில் வென்றுகொள்
ஒட்டங் கையினி லொட்ட மளிக்குமால்.