| சூது |
| உருண்ட பெரிய உலகத்தில் உணவாகப் பகைவர், நிறைந்த நஞ்சு கலந்த பாலைத் தருவதுபோலத் துன்பமே பெருகும். சூதாடும் இடத்தில் வெற்றியால் கிடைத்த பந்தயப்பொருள் மேலும் மேலும் பொருளிழக்கும் ஆசையை உண்டாக்கிக் கையில் ஓட்டைத் தரும். |
| மன்னார்-பகைவர். கட்டம்-துன்பம். கழகம்-சூதாடுமிடம். ஒட்டம்-ஆசை. ஒட்டு-ஓடு. |
| 6 |
|
கவலை தரலால் சூதுக்கு கவறெனும் பேர் காரணப்பேர் | 245 | இவற லேதந் திழிவையுந் தந்துபின் தவறு யாவையுந் தந்துநெஞ் சந்தனைக் கவறென் னேவிக் கலக்கங் கொடுத்தலாற் கவறெ னும்பெயர் காரண நாமமே. |
|
| பேராசையைத் தந்து, இழிவையும் கொடுத்து மேலும் எல்லாப் பிழைகளையும் நிறைத்து மனத்தை வருந்தும்படி தூண்டி நீங்காக் கவலையைக் கொடுத்தலால் சூதாட்டத்திற்குக் `கவலைழு என்னும் பொருள் தரும் `கவழுறென்னும் பெயர் காரணப் பெயரேயாகும். |
| இவறல்-பேராசை. தவறு-பிழை; குற்றம். கவறு-கவலை கொள். |
| 7 |
| போர்க்கும் பழிக்கும் புகலிடம் சூதே |
246 | பந்த யந்தனைப் பற்றிவெஞ் சூதினோடு எந்த ஆடற் கெனினும் இயைபவர் வந்த சீர்நல மாறிவ யாவுக்கு நிந்த னைக்கு நிலையம தாவரால். |
|
| பந்தயப்பொருளை விரும்பிக் கொடுஞ் சூதாட்டத்தை யாடுபவர், போர் முதலிய தீமைக்கும் இணங்குபவராவர். அவர்களுக்குள்ள மேன்மை நன்மை எல்லாம் நீங்கும். வருத்தம் பழி முதலியவற்றிற்கு உறைவிடம் ஆவர். |
| சீர்-மேன்மை. வயா-வருத்தம். நிலையம்-உறைவிடம். |
| 8 |
| ------ |