பக்கம் எண் :

118

 

அதி. 20-கைக்கூலி

 

கைக்கூலி வாங்குவோர் காணார் நடுநிலை

247
வலியினால் இலஞ்சங்கொள் மாந்தர்பாற் சென்று
மெலியவர் வழக்கினை விளம்பல் வாடிய
எலிகள்மார்ச் சாலத்தி னிடத்தும் மாக்கள்வெம்
புலியிடத் தினுஞ்சரண் புகுத லொக்குமே.
 

அரசியல் முதன்மை வலியினால் கைக்கூலி வாங்கும் கொடிய மக்களிடம் சென்று எளியவர் வழக்கைச் சொல்லுவது, பசியால் வாடிய எலிகள் பூனையிடமும், விலங்குகள் புலியினிடத்தும் போய் அடைக்கலம் புகுவதை யொக்கும்.கவலை தரலால் சூதுக்கு கவறெனும் பேர் காரணப்பேர்

 

முதன்மை-அதிகாரம். இலஞ்சம்-கைக்கூலி. மார்ச்சாலம்-பூனை. சரண்-அடைக்கலம்.

 

1

 

கைக்கூலி வாங்குவோரைக் கொன்றாலும் போதாது

248
அல்லினிற் களவுசெய் பவரை வெஞ்சிறை
யில்லிடும் பண்பினுக் கியைந்த மாக்களே
எல்லினி லெவரையும் ஏய்த்து வவ்வலாற்
கொல்லினும் போதுமோ கொடியர் தம்மையே.
 

இராக்காலங்களில் களவு செய்யும் கள்வரைச் சிறையிடும் முறைமன்ற நடுவரே, பகற்காலத்தில் எல்லோரையும் ஏமாற்றிக் கைக்கூலி வாங்குகின்றனர். இக் கொடியவரைக் கொன்றாலும் அக் குற்றத்திற்குப் பொருந்திய தண்டனையாகுமா?

 

அல்-இரவு. வெஞ்சிறை-கடுங்காவல். எல்-பகல்.

 

2

 

உலகிய லழிப்பர்பால் உறும்பழி பாவம்

249
கொலைஞருஞ் சோரருங் கொடிய வஞ்சரும்
நிலைபெற வவர்கையி னிதியைக் கொண்டுதண்
அலைகட லுலகிய லழிக்குந் தீயர்பால்
மலையெனப் பாவமும் பழியு மண்டுமே.

உலகில் கொலை செய்வோரும் கள்வரும் கொடிய வஞ்சகரும் நிலைபெறும்படி, அவர்கள் கையில் கைக்கூலி வாங்கிக்