பக்கம் எண் :

119

 

கைக்கூலி
 

 கொண்டு உலகவாழ்வைக் கெடுக்கும் முறைமன்றக் கொடியவர்பால் பாவமும் பழியும் மலைபோல் பெருகும்.
 சோரர்-கள்வர். நிதி-செல்வம். மண்டும்-பெருகும்.
 3
 கனலுறும் வெண்ணெய்போல் கைக்கூலி அழியும்
250
பயிரினை வேலிதான் மேய்ந்த பான்மைபோற்
செயிருற நீதியைச் சிதைத்தோர் தீயன்சாண்
வயிறினை வளர்த்திட வாங்கு மாநிதி
வெயிலுறு வெண்ணெய்போல் விளியும் உண்மையே.
 வேலியே பயிரை அழிப்பதுபோல் முறையைச் செய்யும் தலைவன் அதைக் கெடுத்துச் சாண்வயிறு வளர்ப்பதற்குக் கைக்கூலி வாங்கித் தீயவனாகின்றான். அத்தீயோன் வாங்கும் பெரும்பொருளும் வெயிலில் பொருந்திய வெண்ணெய்போல் கெடும்.
 மாநிதி-பெரும்பொருள். விளியும்-கெடும்.
 4
 கைக்கூலி வாங்குவோன் கயவரின் அடிமை
251
ஆசையால் வாங்கிடு மவனை யீந்தவர்
கேசமா மதிப்பரக் கீழ்நன் சென்னிதம்
ஆசன மாக்குவ ரடிமை நானெனச்
சாசன மவர்க்கவன் தந்த தென்னவே.
 பேராசையால் கைக்கூலி வாங்கும் கயவனை, கைக்கூலி கொடுத்தவர் `தலையினிழிந்த மயிழுரென மதிப்பர். அவன் தலையைத் தாம் இருக்கும் இருக்கையாக்குவர். அவன் கைக்கூலி பெற்றுக் கொண்டது, தன்னை அடிமைப்படுத்தி எழுதிக் கொடுத்த அடிமை முறியாகும்.
 ஈந்தவர்-கொடுத்தவர். கேசம்-மயிர். ஆசனம்-இருக்கை. சாசனம்-எழுத்துமுறி.
 

5

கடையனாம் வேசையினும் கைக்கூலி பெறுவோன்
252
காசதி கந்தனைக் கருதி வாதந்தீர்ந்து
ஏசுற ஏழைகட் கிடர்செய் வோன்தனம்
மீசரங் குறைவுபா ராது மேவிடுந்
தாசிய ரினுமிழி தகவு ளானன்றோ.