பக்கம் எண் :

120

  நீதுநூல்
 
  மிகுந்த கைக்கூலி தருபவர்க்கு வாசியாக வழக்கைத் தீர்த்து அதனால் ஏழைகள் வயிறெரிந்து ஏசும்படி அவர்களுக்குத் துன்பம் செய்வோன், உயர்வு தணிவு கருதாது பணம் ஒன்றே கருதிக்கூடும் வேசையிரினும் இழிந்தவனாவன்.
  வாதம்-வழக்கு. தனம்-பொருள். மீசரம்-உயர்வு.
  6
 
வழக்கிடாது மனமொத்துப் பங்கிடல் மாண்பு
253
எனதுன தெனவொரு பொருட்கு இரண்டுபேர்
சினமொடு வாதித்தோர் தீயன் பாற்செலின்
தனதென அப்பொருள் தனைக்கொள் வானவர்
மனதொரு மித்ததை வகிர்தன் மாண்பரோ.
  ஒரு பொருளை `என்னுடையது என்னுடையதுழு என்று இருவர் சினமுற்று வழக்கிட்டு, அதை முடிவுசெய்யத் தீயவனிடம் சென்றால், அவன் அப் பொருளைத் தனதெனச் சொல்லிப் பிடுங்கிக் கொள்வன். அதனால், இருவரும் தம்முள் மனமொத்துப் பங்கிட்டுக்கொள்வதே நன்மையாம்.
  வாதித்தல்-வழக்கிடல். வகிர்தல்-பங்கிடல். மாண்பு-நன்மை.
  7
  கைக்கூலிப் பழிசொலக் காணா வோர்வாய்
254
பசியினா லெளியனோர் பகலி ரப்பினும்
அசியுறு மெங்கணும் ஆக்க முள்ளவர்
நிசிபகல் பலரிட நிதமுமேற் கின்ற
வசையினைச் சொல்லவோர் வாயும் போதுமோ.
  எளியவன் பொறுக்க முடியாத பசியினால் ஒருபொழுது பிச்சை எடுப்பான். அவனை எல்லோரும் இகழ்வர். செல்வமும் முதன்மையும் உடையவர் இரவு பகலாக எல்லாரிடத்தும் கைக்கூலி பெறுமுறையில் ஏற்கின்றார்கள். இதனால் வரும் இழிவையும் பழியையும் ஒரு வாயால் சொல்ல முடியுமா? (முடியாது.)
  அசி-இகழ்ச்சிச் சிரிப்பு. நிசி-இரவு. வசை-பழி.
  8