பக்கம் எண் :

121

 கைக்கூலி
 
 ஈந்தோர்க்கெலாம் கைக்கூலி ஏற்போன் பிள்ளை
255
பெற்றவன் கைப்பொருள் பிள்ளைக் கேயலான்
மற்றவர்க் கிலையெனன் மனுவி னீதியாம்
குற்றமே விடநிதி கோடி பேர்கையிற்
பற்றுவோ னவர்க்கெலாம் பாலன் போலுமே.
  பெற்றவர் பொருள் பிள்ளைகளுக்கே உரிமை என்பது மனுமுறை. கைக்கூலி பெறுவான் பாவம் பெருகக் கோடி பேர் கையில் பொருள் ஏற்கின்றான். ஆயின், அவன் அக் கோடிபேருக்கும் பிறந்தவன் ஆவான் போலும்.
 
மனு-சட்டம் வகுக்கும் வேந்து. நீதி-முறைமை. குற்றம்-பாவம். நிதி-பொருள்.
  9
  வேறு
  மானமழியாது தொண்டுசெய்து வாழ்வதே மதிப்பு
256
மண்டலீ கன்றன் தண்டனை நரகவ மானங்
கண்டபேர்க் கெலாம் பயம்பெரும் பகையொடும் கவ்வை
பண்ட மிவ்வகை யீட்டலின் அனுதினம் பலரை
அண்டி மானமாத் தொண்டுசெய் துயிருயல் அழகே.
  கைக்கூலி வங்குதலால் இம்மையில் மன்னர் ஒறுப்பு, மதிப்பின்மை, யாரைக் காணினும் நடுக்கம், ஊர்ப்பகை, நீங்காத்துன்பம் நாளும் பெருகும். மறுமையில் இருளுலகத் துன்பமும் எய்தும். இவற்றைவிட்டுப் பலரையும் அடுத்து மானமழியாது இயன்ற தொண்டு செய்து வாழ்தல் அழகாகும்.
  மண்டலீகன்-மன்னன். நரகு-இருளுலகம். கவ்வை-துன்பம்.
  10
  வேறு
  இருகையும் கைக்கூலி ஏற்றல் முழுக்கொள்ளை
257
இருவ ரிடத்தும் விவாதநிதிக்
கிரட்டி கொள்வர் தகாதென்னின்
அருமை சயமென் பார்தோல்வி
யடைந்தோன் தந்த நிதிகேட்பின்