பக்கம் எண் :

122

  நீதிநூல்
 
258
வெருவ வவன்மேற் பொய்வழக்கை
மெய்போற் கற்பித் திடரிழைத்துச்
சருவ கொள்ளை யடிப்பர்பரி
தானம் வாங்கும் பாதகரே.
  கைக்கூலி வாங்கும் பெரும்பாவி வழக்காளர் இருவரிடத்திலும் வழக்கின் தொகைக்கு இரண்டு பங்கு வலுக்கட்டாயமாகப் பெறுகின்றான். யாரேனும் கொடுக்க மறுத்தால் அவருக்குத் தோல்வியாக்கி விடுகின்றான். இருவர் கொடுத்தாலும் ஒருவரே வெல்லுவர். தோற்றவர் தாங்கொடுத்த கைக்கூலிப் பொருளைத் திருப்பித்தரக் கேட்டால், அவர்கள்மேல் பொய் வழக்கு ஏற்படுத்தித் துன்புறுத்துவன். இவ்வகையாக முழுக்கொள்ளை யடிப்பவன்.
  சருவகொள்ளை-முழுக்கொள்ளை.
 
11
  கைக்கூலியால் முறைசெயல் களவுப்பொருள் விலையொக்கும்
259
பொய்வா தியர்பாற் பொருள்கொண்டு
   வாழ்க்கைப் புரட்டல் அநீதிபொருள்
மெய்வா தியர்பாற் கொண்டவர்க்கு
   விவாதந் தீர்க்கும் நிலைஎற்றேல்
உய்வார் பொருளைக் கவர்ந்ததற்கு
   விலைகொண்டு உவர்க்குஉஃது இடல்போலும்
பெய்வான் மழைக்கு வரிவாங்கிப்
   பிழைக்கும் கொடுங்கோன் போலுமால்.
  பொய்வழக்காடுபவரிடம் கைக்கூலி பெற்று வழக்கை அழி வழக்குச் செய்வது முறைகேடு ஆகும். மெய் வழக்காளர்பால் கைக்கூலி பெற்று அவ் வழக்கை முடிப்பது (முறை கேடன்று) ஒருவன் பொருளைக் கவர்ந்து அப் பொருளுக்கு அவனிடம் விலை வாங்கிக்கொண்டு கொடுப்பதையும், கைம்மாறு கருதாது பெய்யும் மழைக்கு வரிவாங்கிப் பிழைக்கும் கொடுங்கோல் மன்னன் செயலையும் ஒக்கும்.
  வாதியார்-வழக்காடுபவர். அநீதி-முறைகேடு.
  12