பக்கம் எண் :

123

  கைக்கூலி
 
  நன்றாய் வின்மையும் நண்ணுங்கைக் கூலிபால்
260
வரும்வா தியரோ டுறவுபற்று
  வரவு முதல்செய் குதல்விரைவில்
கருவி விவாதம் தீர்க்காது
  காலங் கழித்தல் சோம்பலினால்
உருவ வழக்கின் நிலையினைநன்
  குணராத் தன்மை பொதுநீங்கல்
பொருவில் இவையா தியபுரைகள்
  இலஞ்ச மதனைப் பொருவுமால்.
  வழக்காளிகளுடன் நட்புக்கொள்ளுதல். கொடுக்கல் வாங்கல் செய்தல், நுணுகி ஆராய்ந்து விரைவில் வழக்கைத் தீர்க்காமை, வீண் காலம் கடத்தல், மடியினால் வழக்கின் உண்மையினைத் தெளியாமை, நடுவுநிலைமை தவறுதல் முதலிய குற்றங்கள் பலவும் கைக்கூலியோடு ஒக்கும்.
 
கருவி-நுணுகி. விவாதம்-வழக்கு. சோம்பல்-மடி. பொது-நடுவுநிலைமை. புரைகள்-குற்றங்கள். இலஞ்சம்-கைக்கூலி.
  13
  வேறு
  மேல்கீழ் மிகுபொருள் எண்ணல் கைக்கூலியே
261
நேயர் பற்சர் தீனர் நிதியோ ரெனச்சொல்
  பேத மதையே நினைத்த நிதி புரிதன்
மாய முற்ற பேர்கள் சொலையே மதித்த
  டாத பக்க வாதமுற்று நீதி தவிர்தல்
தீய வத்த மாதி யோடு லோகரத்ந
  ராசிபல தேயமுற்று மார்பொ ருளெலாம்
தேய முற்றி யேலலவை காதலித்
  தலாதிபரி தான மொத்த தீது களரோ.
  நண்பர் பகைவர் ஏழை செல்வர் என்று சொல்கின்ற வேறுபாட்டை நினைந்து முறைகோடுதல், பொய்யர் சொல்லை மெய்யென மதித்து ஓரஞ்சார்ந்து முறை தவறுதல், தீயவழிச் செல்வமுடன் பல பண்டம் மணி முதலிய ஒளிக் கற்கள் முற்றும் பெற ஆசைப்படுதல் முதலியவை கைக்கூலியே ஆகும் தீமையாம்.
  பற்சர்-பகைவர். தீனர்-ஏழைகள். நிதியோர்-செல்வர். அத்தம்-செல்வம். ரத்நம்-ஒளிக்கல். காதலித்தல்-ஆசைப்படுதல்.
  14
------