பக்கம் எண் :

124

  அதி. 21-புறங்கூறல்
  பழியஞ்சும் பண்பினர் பகரார் புறங்கூறல்
262
சாம்பிணம் இடுவனஞ் சாருந் துன்மணம்
பூம்பொழில் பரிமளம் பொருந்தி நாறிடும்
தாம்பழி யுளரலால் தகுதி யோர்பிறர்
நோம்படி யவர்குறை நுவலு வார்களோ.
  செத்த பிணத்தை இடுதலும் சுடுதலும் செய்யும் காடு தீய நாற்றமே நாறும். அழகிய தேனிறை மலரும் தீங்கனியும் பொருந்திய சோலை நல்ல மணமே தரும். பிறர் மனம் வருந்தும்படி அவர் குறையை அவரில்லாத இடத்துச் சொல்லுதலாகிய புறங்கூறுதலை தக்கவர் கூறார்; கூறின், புறங்கூறுவார் மேல் பழி சுற்றும் என்னும் உண்மை உணர்தலான்.
 
வனம்-காடு. பொழில்-சோலை. உளரல்-சுற்றுதல்.
  1
  புறங்கூறுவோன் குலநலம் பொருந்தாப் புன்மையன்
263
நலத்தின்மிக் கார்சொலார் நயமில் சொல்லையே
சொலத்தகாப் பழிபிறர் மீது சொல்லுவோன்
குலத்தினு நலத்தினுங் குறையு ளானெனத்
தலத்தவன் வாய்மொழி சாட்சி யாகுமே.
  நன்மை மிகுந்தவர் கடுமையான சொல்லைச் சொல்லார். பிறர்பால் சொல்லக் கூடாத பழமொழிகளைப் புறங்கூறுபவன் உயர்ந்த ஒழுக்கமும் சிறந்த பண்பும் இல்லாதவன் ஆவன். இதற்கு உலகில் புறங்கூறுதலாகிய அவன் வாய்மொழியே சான்று பகரும்.
  குலம்-உயர்ந்த ஒழுக்கம். நலம்-சிறந்த பண்பு. தலம்-உலகம். சாட்சி-சான்று.
  2
  புறங்கூற லாலுள்ளப் புன்மை வெளியாம்
264
உள்ளவங் கணங்கசிந் தோடல் போலொரு
கள்ளநெஞ் சினன்புறங் கழற லன்னவன்
உள்ளமார் புரையெலாம் ஒழுகி வாய்மொழி
வெள்ளமாய் வழிகின்ற விதத்தை மானுமே.