பக்கம் எண் :

125

 புறங்கூறல்
 
 வஞ்ச நெஞ்சுடையவன் புறங்கூறுதல், அவனுடைய உள்ளத்திலுள்ள தீமைகளெல்லாம் வாய்வழியாக வழிந்தோடுவதாம். அது, சாக்கடை கசிந்தோடுவதை யொக்கும்.
 அங்கணம்-சாக்கடை. புறங்கழறல்-புறங்கூறுதல். புரை-தீமை. மானும்-ஒக்கும்.
 

3

 மெய்யே புறங்கூறினும் வேண்டாப்பொய் ஆகும்.
265
இன்னலே யேதிலார்க் கிழைக்கு மச்சொலே
முன்னமெய் யென்னினும் முழுப்பொய் போலுமாம்
அன்னவர் குறையினை யறிந்து மின்றெனப்
பன்னுபொய் மெய்யினும் பாடு டைத்தரோ.
 பிறர்க்குத் துன்பம் தரக்கூடிய சொல், வாய்மையாக இருப்பினும் பொய்ம்மையாம். அவருடைய குற்றத்தை உணர்ந்தும், இல்லையென்று பொய் சொல்வது மெய்ம்மையாம்.
 இன்னல்-துன்பம்.
  4
  வேறு
  சான்றினில் குற்றம் கூறுதல் தகுமால்
266
ஆட்சியா முலகரசன்முன்
சாட்சிசொல் சமையத்தலான்
மாட்சியோர் பிறர்மறுவினை
நீட்சியா நிகழ்த்தார்களே.
  உலகாள் வேந்தன் முன் சான்று சொல்லும்போது மட்டும் பிறர் குற்றத்தை எடுத்துச் சொல்லுவார். மற்று எவ்விடத்தும் எக்காலத்தும் பிறர் குற்றத்தை எடுத்துக் கூறார்.
  ஆட்சி-ஆளுவது.மறு-குற்றம்.நிகழ்த்தார்-சொல்லார்.
  5
  புறங்கூறார் கடமை பொன்றாப் புலவர்
267
மதியிலார் செய்வடுஅவர்
எதிரினின் றியம்பினும்
முதுகினின்று மொழிவரோ
விதியுணர்ந்த விபுதரே.