பக்கம் எண் :

127

  அதி. 22-பெரியோரைத் தூறல்
  பெரியோர் புகழை மாசுறப் பேசல் பெரும்பிழை
270
அரிய குணஞ்சேர் பெரியர் தமக்கு
  அமையக் கடல்சூழ் புவனமெங்கும்
விரியும் இசைமா கறவர்மேல்
  விளம்பும் பொய்ச்சொல் அண்டமிசைத்
திரியும் பானுக் கிரணமதைத்
  திரட்டிப் பற்றி அதன்மீது
கரியைப் பூச வேண்டுமெனக்
  கருதுந் தன்மை பொருவுமால்.
  பெரியோர்க்கு அரிய குணங்கள் பல பொருந்துதலால், கடல்சூழ் உலகமெங்கும் அவர் புகழ் பரவுகின்றது. அப்புகழைக் கறைப்படுத்த அவர்மேல் பொய்ப்பழி கூறுகின்றனர். அது ஞாயிற்றின் கதிரைச் சேர்த்துப் பிடித்து அதன்மீது கரியைப் பூசவேண்டுமென்று எண்ணுவதை யொக்கும்.
 
அமைதல்-பொருந்தல். புவனம்-உலகம். இசை-புகழ். அண்டம்-உலகம். பானு-ஞாயிறு. கிரணம்-கதிர். பொருவும்-ஒக்கும்.பானு-ஞாயிறு. கிரணம்-கதிர். பொருவும்-ஒக்கும்.
  1
  பெரியோரைப் பழிப்போன்மேல் பெய்யும் அப்பழி
271
காற்றின் எதிரே நின்றொருவன்
  காறி உமிழும் உச்சிட்டம்
மாற்றி யவன்மேல் வந்துவிழும்
  வாய்மை போலித் தாரணியில்
தோற்றி யொழியும் வாழ்வதனைத்
  துறந்த மேலோர் மீதொருவன்
தூற்றிக் கூறும் வசைச்சொற்கள்
  சொன்னோன் மீதே தோயுமால்.
  ஒருவன் காற்றுக்கு எதிராக நின்றுகொண்டு காறித்துப்பும் எச்சில் அவன்மேல் வந்து விழுவதுபோல், உலகில் `காமவெகுளி