பக்கம் எண் :

128

 
 நீதிநூல்
 
 மயக்கங்கள்ழு அற்ற பெரியோர்மேல் பழிச் சொற்களைச் சொன்னால் அச் சொற்கள் சொன்னவன்மீதே சாரும்.
 உச்சிட்டம்-எச்சில். வசை-பழி. தோயும்-சாரும்.
 2
 
ஆன்றோர்மேல் சொல்பழியை அறிவுடையார் கொள்ளார்
272
கடலனலுற்று எரிந்ததென்றுங்
  கதிர்குளிர்நோ யுற்றதென்றுந்
தடவரையே சாய்ந்ததென்றுஞ்
  சாற்றுமொழி நம்புவரார்
திடமுடைய சான்றோர்மேற்
  செப்புமவ தூறதனைப்
புடவிமிசை வாழறிஞர்
  பொய்யெனவே தள்ளுவரால்.
 கடலில் தீப்பற்றி எரிந்ததென்றும், கதிரவன் குளிர் நோயுற்றானென்றும், பெருமலை அடியோடு சாய்ந்ததென்றும் ஒருவன் சொன்னால், அதனை நம்புவார் யார்? ஒருவருமிலர். அதுபோலவே உரனுடைய பெரியார்மேல் ஒருவன் பழி சொன்னால் அதனை அறிவுடையார் பொய்யெனவே தள்ளுவர்.
 திடம்-உரன். அவதூறு-பழி. புடவி-உலகம்.
 3
 தீயோர் தூயோரைத் தேறுவர் தம்போல்
273
வய்கைக்கு நோயினர்க்கே மாமதுவுங் கைப்பாகுங்
காய்வெயுலு மஞ்சணிறங் காமாலைக் கண்ணருக்கே
சாய்நிழலுஞ் சுடுவெயிலாந் தாபச் சுரத்தினர்க்கே
தீயவர்க்குத் தூயவருந் தீயவர்போற் றோன்றுவரே.
 வாய் கசக்கும் பித்தநோய் உடையார்க்கு கொம்புத்தேனும் கசக்கும். காமாலைக் கண்நோய் உடையார்க்கு நடுப்பகல் வெயிலும் மஞ்சள் நிறமாகக் காணப்படும். காமச்சுர நோயுடையார்க்கு மாலை வெயிலும் உச்சி வெயில்போல் மிக்க சூடாம். தீயவர்களுக்கு நல்லவர்களும் தீயவர்கள் போன்றே காணப்படுவர்.
 மாமது-பெருந்தேன்; கொம்புத்தேன். தாபம்-காமம். தூயவர்-நல்லவர்.
 4