பக்கம் எண் :

13

 அவையடக்கம்
 
  பசுவை நோக்காது பாலைக் கொள்வதுபோல் பாட்டை
நோக்காது பயனைக் கொள்க.

4

பயன்கொள்வோ ரதனை நல்கும் பசுவுரு
   விலதென் றோரார்
வியன்சினை வளைவு நோக்கார் விளைந்தீங்
   கனிப றிப்போர்
கயங்கொள்சே றகற்றித் தெண்ணீர் கைக் கொள்வா
   ரென்ன நூலின்
நயன்கொள்வ தன்றிப் பாவி னவையைநோக்
   கார்மே லோரே.
  பாலும் பழமும் தண்ணீரும் விரும்புவோர் பசுவுருவும் மரவளைவும் சேற்றுக் கலப்பும் கருதாது கொள்வதுபோல் முறையுணர்வோர் பாட்டின் குற்றம் கருதாது பயன் கொள்வார்.
  கயம்-குளம். நயன்-முறை. நவை-குற்றம்.
 

 4

 கடலுக்கு நீர் தரும் மழைபோல் கற்பித்தாரிடத்தே
ஒப்புவித்தேன்
5
வேலைவா யுண்ட நீரை மேகஞ்சிந் தினுமே சிந்துங்
காலிடைக் கொண்ட நீரைக் கழனியக் காற்கு நல்கும்
பாலர்கற் றவையா சான்பாற் பகர்வர்யான் நாலு ணர்ந்த
சீலர்பாற் கற்றதன்னோர் செவியுற நவின்றே னம்ம.
  மேகம் வயல் மாணாக்கர் மூவரும் முறையே கடலிற் கொண்ட நீரைக் கடலுக்கும், வாய்க்கால் வழிக் கொண்ட நீரை வாய்க்காலுக்கும், ஆசான்பாற் கற்றவற்றை ஆசானுக்கும் ஏற்பிப்பது போல் யானும் பெரியவர்பால் கற்றவற்றை அவர்களிடமே கூறுகின்றேன்.
 வேலை-கடல். சிந்து-கடல். கழனி-வயல். கால்-வாய்க்கால். சிலர்-நல்லொழுக்கப் பெரியோர்
 

5

 முறையைப் பழிப்பதாம் என் பாட்டைப் பழிப்பது
6
கோவிலைப் பழிக்கி னோரெண் குணனையும்
   பழித்த தொப்பாம்
காவினைப் பழிக்கின் ஆண்டார் கடிமலர்ப்
   பழித்த தொப்பாம்