14 |
|
| நீதிநூல் | | வாவியைப் பழிக்கிற் கொண்ட வண்புனல் பழித்த தாமென் பாவினைப் பழிக்கி னீதிப் பயனையும் பழித்த தாமே.
|
| | கோவிலைப்பழிப்பது கடவுளைப் பழிப்பதாகும்; சோலையைப் பழிப்பது பூவைப் பழிப்பதாகும்; குளத்தைப் பழிப்பது தண்ணீரைப் பழிப்பதாகும். (இவைபோன்றே) என் பாட்டினைப் பழிப்பது நீதி முறையையே பழிப்பதாகும். | | எண்குணன்-கடவுள். கா-சோலை. பா-பாட்டு. | | 6 | | எண்குணம்; தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல். பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை. | | _____ |
|
|
|
|