| அதிகாரம். 1-தெய்வமுண்டெனல் |
| ஏதுக்களால் தெய்வம் உண்டென இசைத்தல் |
7 | மண்டப மாதி கண்டோர் மயனுளன் என்னல் போலுங் குண்டல முதல்கண் டோர்பொற் கொல்லனுண் டென்னல் போலும் ஒண்டுகில் கண்டோர் நெய்தோன் ஒருவனுண் டென்னல் போலும் அண்டமற் றகண்டஞ் செய்தோன் உளனென அறிவாய் நெஞ்சே.
|
|
| மண்டபம் குண்டலம் ஆடை முதலிய செயப்படுபொருளைக் கண்டதும் முறையே கொற்றன், தட்டான், நெய்வோன் ஒருவன் உளன் என்று உய்த்துணர்வதுபோல், உலகமும் பிறவும் கண்டதும் இவற்றைப் படைத்தருளிய முழுமுதல் ஒன்று உண்டு என்று நெஞ்சே உணர். |
| அண்டம்-நிலம். அகண்டம்-நிறைவு. |
| 1 |
8 | தீட்டுவோன் இன்றி யாமோ சித்திரந் திகழ்பொற் பாவை யாட்டுவோன் இன்றித் தானே யாடுமோ திவவி யாழின் மீட்டுவோன் இன்றிக் கீதம் விளையுமோ சராச ரங்கள் நாட்டுவோன் ஒருவனின்றி நன்கமைந் தொழுகுங்கொல்லோ. |
|
| சித்திரம் பாவை யாழ் முதலியன முறையே வரைவோரையும் ஆட்டுவோரையும் மீட்டுவோரையும் இல்லாமல் வெளிப்படாமைபோல, இயங்குதிணை நிலைத்திணையாகிய உயிரினங்கள் கடவுளை இன்றி உடல் கொண்டு உலகத்துத் தோன்றா |
| 2 |
9 | மரமுத லசைத லாற்கா லுளதென மதிப்பா ரெங்கும் பரவிய புகையாற் செந்தீ யுளதெனப் பகர்வார் சுற்றும் விரவிய மணத்தாற் பாங்கர் வீயுள தென்று தேர்வார் பரனுள னெனுமுண்மைக்குப் பாரெலாஞ் சான்று மன்னோ. |
|