பக்கம் எண் :

16

 நீதிநூல்
 
 

மரமுதலிய அசைவால் காற்றும், புகையால் தீயும், மணத்தால் பூவும் உண்டு என மதிப்பர்; அதுபோல் உலகத்தால் கடவுள் உண்மை பெறப்படும்.

 வீ-பூ.பரன்-கடவுள்.
 

 3

10
நாதனில் லாத வீடு நாளுமே நடவா தென்னில்
வேதநா யகனி லானேல் விரிகதிர் மீனு தித்தல்
சீதநீர் பெயல்தருக்கள் சீவரா சிகள்க தித்தல்
பூதபௌ தீக மெல்லாம் புரையற ஒழுகற் பாற்றோ.
  தலைவன் இல்லாத வீடு நடவாமைபோலக், கடவுளில்லாத உலகமும், உலகத்து ஞாயிறு திங்கள் விண்மீன் முதலியன தோன்றலும், மழைபெய்தலும், உயிர்கள் வாழ்தலும் நிகழமாட்டா.
  பூதபௌதீகம்-உலகமும் அதனாலாம் செயற்கையும்.
 

 4

11
பூதம்யா வுக்கும் ஏணாய்ப் பொருந்திய விசும்பைக் காற்றை
வேதனூ லதனை மண்ணோர் மெய்யுரை யுயிரை நெஞ்சை
ஏதமிலறத்தைக்கண்ணாற் பார்த்திலோ மெனினுமுண்டென்று
ஓதல்போல் தெய்வந்தானொன் றுளதெனல் தேற்ற மம்மா.
  நீலம், நீர், தீ முதலிய பூதங்களுக்கு ஆதராமாய் உள்ள காற்றை, வானத்தை, அறிவை, உயிரை, அறத்தைக் கண்ணால் பார்ப்பதில்லை. ஆனால் உண்டென்று ஒப்புக்கொள்கின்றோம். அதுபோன்று தெய்வம் உண்டென்பதும் தெளிவு.
 வேதநூல்-அறிவு.ஏண்-ஆதாரம்.
 

 5

12
வாசமூக் கறியுமன்றி வாய்செவி விழிமெய் தேரா
பேசவாய் அறியு மன்றிப் பின்னையோர் புலன்றே ராது
நேசமார் தொண்டர் ஞான நேத்திரங் கொண்டு காணும்
ஈசனை முகத்தில் கண்ணால் இகத்தில்யார் காண வல்லார்.
 மணத்தை மூக்கறியுமே அல்லாமல் காது முதலிய ஏனைப் புலன்கள் அறியா. பேச வாய் அறியும், மற்றது அறியாது. அதுபோலக் கடவுளை மெய்யன்பர்கள் ஞானக்கண் கொண்டு காண்பர். அப்படியிருக்க உலகத்தில் யாவர் முகக்கண்ணால்காண்பர்?
 வாசகம்-மணம். இகம்-உலகம்.
 

 6