பக்கம் எண் :

17

 தெய்வமுண்டெனல்
 
13
வானின்றி மழையு மில்லை வயலின்றி விளைவு மில்லை
ஆனின்றி கன்றுமில்லை அரியின்றி யொளியு மில்லை
கோனின்றிக் காவ லில்லை குமரர்தா யின்றியில்லை
மேனின்ற கடவு ளின்றி மேதினி யில்லை மாதோ.
  மேகம் இல்லாமல் மழை இல்லை; வயல் இல்லாமல் விளைவு இல்லை; பசு இல்லாமல் கன்றில்லை; ஞாயிறு இல்லாமல் வெளிச்சமில்லை; அரசனில்லாமல் காவலில்லை. தாயில்லாமல் மக்களில்லை. இவைபோலக் கடவுளில்லாமல் உலகமில்லை.
  அரி-ஞாயிறு. ஒளி-வெளிச்சம்.
 

 7

14
கதிரவற் கொளியின் றென்னக் கண்ணிலார்
   கழறல் போலும்
வதிரர்பே ராழி யோசை மாறிய
   தென்னல் போலும்
எதிருறு பொருளைக் காணா திடருறு
   பித்தர் போலும்
மதியிலார் தேவின் றென்ன மருளொடும்
   இயம்பு வாரே.
  குருடர் ஞாயிற்றுக்கு ஒளியில்லை என்பதையும், செவிடர் கடலுக்கு
ஓசையில்லை என்பதையும், பித்தர் எதிரிலுள்ள பொருளறியாது துன்புறுவதையும் ஒக்கும், அறிவிலார் கடவுளில்லை யென்று மயங்கிக் கூறுதல்.
 வதிரர்-செவிடர். ஆழி-கடல். தேவு-கடவுள்.
 

 8

15
அத்தன்தாய் முன்னோர் தம்மை யறிகிலா னிலரென் பானோ
சத்தமின் சுவைகந் தத்தைத் தரிசியா னிலனென் பானோ
நித்தனைக் கண்ணிற் காணா நீர்மையா லிலனென் றோதும்
பித்தரிற் பித்தர் பாரில் பேசிட வுளரோ அம்மா.
 தந்தைதாய் முன்னோரை அறியாதவன் அவர்களை இல்லையென்று சொல்ல முடியுமோ? ஓசை, சுவை, மணம் இவற்றைக் கண்ணிற் காணாமையால் இல்லை யென்று சொல்ல முடியுமா? இவை போன்றே கடவுளை நேரிற் காணாமையால் இல்லை யென்று சொல்ல முடியாது. அப்படிச் சொல்வோர் பெரும்பித்தர் ஆவர்.
 அத்தன்-தந்தை. நித்தன்-கடவுள்.
 

 9

 நீ.-2