| நீதிநூல் |
16 | தேவனே யிலனேல் மோக்கந் தீநர கில்லை வேதம் பாவபுண் ணியங்க ளில்லை பரனிலை யென்போ னில்லின் மேவலர் தீயிட் டன்னான் விபவமெல் லாஞ்சி தைத்துச் சீவனை வதைசெய் தாலென் செய்குவன் சிதடன் றானே
|
|
| கடவுளில்லாவிடின் வீடில்லை; நரகமில்லை; கடவுள் நூல் இல்லை. பாவபுண்ணியங்க ளில்லை, என்று சொல்லித்திரிவோன் வீட்டில் தீவைத்தும் அவன் செல்வத்தைக் கொள்ளையிட்டும் அவனைக் கொன்றும் கொடுமை செய்தால் அவ்வறி வில்லாதவன் என்ன செய்வான். |
| இல்-வீடு. விபவம்-செல்வம். சிதடன்-அறிவில்லாதவன். |
| 10 |
| |
| அதி. 2. தெய்வத்தன்மையும் வாழ்த்தும் |
| பிறப்பு இறப்பு இல்லாப் பெரியோனை வாழ்த்து |
17 | ஆதியீ றில்லான் றன்னை யமைத்தகா ரணமொன் றில்லான் கோதிலான் கணத்து ளண்டங் கோடிசெய் தழிக்க வல்லான் ஓதிடு மொப்பொன் றில்லான் உருவிலான் இருவிண் டங்குஞ் சோதிதன் னிழலாக் கொண்ட சோதியைத் துதியாய் நெஞ்சே. |
|
| முதலும் முடிவும் இல்லாதவன்; தன்னை உண்டாக்கிய ஒரு காரணப்பொரு ளில்லாதவன்; குற்றமில்லாதவன்; நொடிப் பொழுதினுள் திருவுள்ளத்தால் அளவிலாத அண்டங்களைப் படைத்து ஒடுக்கும்வலிமையுள்ளவன்; ஒப்பில்லாதவன்; உருவில்லாதவன்; பரவெளியில் தங்கும் பேரொளியானவன். ஒளி நிழலானவன். அவனை நெஞ்சே வணங்கு. |
| கோது-குற்றம். கணம்-நொடி. விண்டு-நீங்கி. |
| 1 |