பக்கம் எண் :

19

 தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
 
 காணரும் வடிவினன் கடவுள்
18
ஆணலன் பெண்ணு மல்லன் அஃறிணை யலன்பா ரல்லன்
சேணலன் புனல்தா லல்லன் தீயலன் ஐம்பு லத்தால்
காணரும் வடிவ னித்தன் கத்தனம் மத்தன் சுத்தன்
மாணற முருக்கொண்டன்ன மாட்சியான் கடவுணெஞ்சே.
 சிறந்த அறமே உருக்கொண்டனைய மாண்பினவன் கடவுள், அவனே தூயா தலைவனும் தந்தையும் ஆவன். ஆனால் ஆண், பெண், உயிர், மண், விண் முதலிய பூதம், அவன் அல்லன்.
 

 2

 எப்பொருளினும் நீக்கமின்றி நிற்போன் இறைவன்
19

தரையெலா முளன்து ரும்பு தன்னினு
   முளனண் டாண்ட
நிரையெலா முளன்மெய் யாவி நெஞ்சுளு
   முளனி யம்பும்
உரையெலா முளன்தான் மேவி யுறைபொருள்
   கெடக் கெடாதான்
புரைதபு தன்னைத் தானே பொருவுவோ
   னொருவ னன்றே.

 தனக்குத்தானே ஒப்பாகிய கடவுள், தரை, துரும்பு, பல உலகங்கள், உயிர், நெஞ்சம், சொல் முதலிய எல்லாவற்றோடும் கலந்து நிற்கின்றான். அப்படி நிற்பினும் அப்பொருள் கெடுங்காலத்துத் தனக்குக் கேடின்றித் தனித்து நிற்பன்.
 வதிரர்-செவிடர். ஆழி-கடல். தேவு-கடவுள்.
 

 3

 உலகியல் விதித்தோன் கடவுள்
20
உடுக்கணம் யாவும் வெவ்வே றுதயனா மொவ்வொன் றிற்கும்
நடுக்கட்பூ வலயஞ் சோம நபமொடும் வரம்பில் கோடி
அடுக்கடுக் காச்செய் தெல்லா மந்தரத் தமைந்து நிற்க
இடுக்கணொன் றின்றிக் காக்கும் எம்பிரான் பெரியனன்றோ.
 விண்மீன்கள் ஒவ்வொன்றும் தனித்தனிச் சூரியனாம். ஒவ்வொன்றுக்கும் உலகம், திங்கள், வானம் முதலியனவாகப் பலகோடி உலகங்க ளுண்டு. அவற்றை வெளியில் அமைத்துக் கேடில்லாமல் காப்பவன் கடவுள்.
 நபம்-வானம்.
 

 4