| நீதிநூல் |
| முட்டியுல கழியாது முடிப்பவன் கடவுள் |
21 | பண்ணிய புவன மெல்லாம் படர்கையிற் பரிக்கும் ஏகன் நண்ணிய கரஞ்சற் றோயின் நழீஇயொன் றோடொன் றுமோதித் திண்ணிய வகில கோடி சிதைந்துகு மெனவ றிந்தும் புண்ணிய மனுவால் தேவைப்போற்றிடா வாறென் னெஞ்சே.
|
|
| உலகங்கள் எல்லாவற்றையும் கையில் வைத்துக் காக்கும் தனிமுதற் கடவுள்; திருக்கைசற்று ஓய்ந்தால், உலகங்கள் நழுவி அழிந்துபோம். இவ்வுண்மையை உணர்ந்து ஒப்பில்லாத கடவுளைத் தூயதமிழ் மந்திரத்தால் நெஞ்சமே தொழு. |
| நழீஇ-நழுவி. |
| 5 |
| அடிமுடி எவர்க்கும் அறியொணான் கடவுள் |
22 | இதயந்தன் வேகத் தோடு மெண்ணிலவ் வியத்த காலங் கதமொடு மீச்சென் றாலுங் கடவுண் மெய்ந் நடுவையன்றி யிதரவங் கத்தைக் காணா தெனின்முடி யெவண்பொன் னொக்கும் பதமெவ ணகண்டா காரப் பராபரற் குரையீர் பாரீர். |
|
| மனம் தன் முழு விசையோடும் அளவிடப்படாத பேரெண் உள்ள காலமெல்லாம் ஓடினாலும் தெய்வத் திருவுருவின் நடுவினையே காணமுடியும். ஆதலால், எல்லாம் ஆய இறைவனுக்கு முடியும் அடியும் எவ்விடத்தன என்று காணமுடியாது. |
| அவ்வியம்-பேரெண். அண்டாகாரம்-அளவிலா வடிவம். |
| 6 |