பக்கம் எண் :

21

 தெய்வத்தன்மையும் வாழ்த்தும்
 
 ஆராலும் வாழ்த்தற் கரியவன் கடவுள்
23
விலகரும் அருளின் மீக்கூர் விமலனை வாழ்த்த வேண்டின்
அலகில்கற் பங்க ளேநம் ஆயுளாய் மும்மைத் தாய
உலகமோ ருடம்பா யந்த வுடம்பெலாம் வாயாய் நித்தம்
பலகவி மாலை சூட்டிப் பரவினும் முடியுங் கொல்லோ.
 ஊழிக்காலம் வாழ்நாளாய் மூவுலகும் உடம்பாய், உடம்பெல்லாம் வாயாய், ஒவ்வொருநாளும் பலவகைப் பாமாலை சூட்டி வாழ்த்தினும் பேரருளும் பெரும்புகழும் உடைய ஆண்டவனை வாழ்த்துதல் முடியாது.
 கற்பம்-ஊழி.
 

7

 உடலூண் உணர்வெலாம் உதவுவோன் கடவுள்
24
உருவில்சூ னியமா யாது முணர்விலா திருந்த நம்மைத்
திருவுட லோடு ஞானச் சீவனா கப்ப டைத்துச்
சருவநன் மையுமே தந்து தந்தையுந் தந்த நாதன்
மருமல ரடிக்கு நம்மை வழங்குதல் பெரிதோ நெஞ்சே.
 உருவின்றி உணர்வு விளங்காதிருந்த நமக்கு உடலும் உணர்வுவிளக்கமும் எல்லா நன்மையும் தந்தருளியவன் கடவுள். அவன் திருவடிக்கு நம்மை ஒப்புவித்தல் பெருஞ் செயலோ!
 

8

 எல்லாம் அருளும் இறைக்கொப்பின்று
25
பூமிநம் மில்லா மற்றைப் பூதங்கள் பணிசெய் வோராஞ்
சோமன்மீன் கதிர்வி ளக்காஞ் சூழ்மரம் பயிரா காரச்
சேமவைப் பாந மக்கித் திரவிய மியாவு நல்குஞ்
சாமியை உவமித் தேத்தச் சாமியம் யாது நெஞ்சே.
 நமக்கெல்லாம் பொதுவீடு உலகம்; திங்கள் விண்மீன் ஞாயிறு விளக்குகள்; நீர் முதல் பூதம் வேலையாள்; சூழ்ந்துள்ள பயன் மரங்கள் உணவுதரும் நற்பயிர்கள்; பெருங்கடல் வைப்பு. இப்படி யெல்லாம் அருளிய இறைவனுக்கு எப்படி ஒப்புக் காண்பது?
 சோமன்-திங்கள். சாமியம்-உவமை.
 

9