பக்கம் எண் :

22

 நீதிநூல்
 
 தெய்வப் புணையிலார் சேரிட மில்லார்
26
தோன்றக லிடம தென்னுந் துன்பசா கரத்தி லத்தன்
தேன்தரு மலர்த்தாள் தெப்பஞ் சேர்கிலா தகன்று நிற்போர்
வான்றனைப் பிரிந்த புள்ளும் வாழுநீர் நீத்த மீனுங்
கான்றனை யகவில் லங்குங் காவல்தீர் நகரு மொப்பார்..
 விரிந்த உலகமாகிய துன்பக்கடலுள் எல்லார்க்கும் தந்தையாகிய கடவுளின் திருவடிப்புணையைச் சேராது விலகிநிற்போர், வானத்தைப் பிரிந்த பறவையும், நீரைப் பிரிந்த மீனும், காட்டை விட்ட விலங்கும், காவல் இல்லா நகரும் பயன் எய்தாமைபோல் நாற்பெரும்பயனும் எய்தார்.
 

10

 இறையருள் உண்டேல் அச்சம் இன்று
27
பாரெலாம் பகைசெய் தாலும் பராபரன் கருணை யுண்டேல்
சாருமோர் துயரு முண்டோ தாயினு மினிய வையன்
சீரரு ளின்றேல் எண்ணில் தேர்கரி பரிப தாதிப்
பேரணி யுடைய மேனும் பிழைக்குமா றெவன்கொ னெஞ்சே.
 கடவுள் திருவருள் நமக்கு இருக்குமானால் உலகமெல்லாம் பகைத்தாலும் துன்பம் ஒன்றும் உண்டாகாது. அவன் அருள் இல்லாவிட்டால் நால்வகைப்படையோடிருப்பினும் நாம் தப்புதல் முடியாது.
 கரி-யானை. பரி-குதிரை. பதாதி-காலாள்.
 

11

 கடவுளை அறியாது காலங் கழித்தனை
28
இருநிதி பெற்ற தீனர் எண்ணிடா திகழ்ந்த தொப்ப
அருவமாயுருவ மாய்நம் மாருயிர்க் குயிரா யண்டம்
பெருநில மெங்கு மின்பம் பெருக்கெடுத் தோங்கி நிற்குங்
கருணையங் கடலா டாது கழித்தனை வாழ்நா ணெஞ்சே.
 நெஞ்சே நீ அருவமாய் உருவமாய் உயிருக்கு உயிராய்ப் பேரின்பப் பெருக்காய் எங்கு நிறைந்த திருவருட்கடல் ஆடாது வாழ்நாள் போக்கல், பெரும்பொருள் பெற்ற வறியவர் அப்பொருளைக் கருதாது இகழ்வதை யொக்கும்.
 தீனர்-வறியவர்.
 

12