| தெய்வத்தன்மையும் வாழ்த்தும் |
| கடவுளை நினைக்க நினைக்க நேரும்பே ரின்பம் |
29 | முன்னவன் றனையு ளத்து முன்னமுன் னத்தெ விட்டாக் கன்னலோ வமுதோ பாகோ கற்கண்டோ வெனத்தித் திக்கும் இன்னன்மே வாத வன்றா னெங்கணு நிறைந்தி ருந்தும் அன்னையை நீத்த சேய்போ லையனை நீத்தாய் நெஞ்சே.
|
|
| ஆண்டவனை நினைக்க நினைக்கக் கரும்பு, அமுது, வெல்லப்பாகு, கற்கண்டு முதலிய போன்று இனிக்கும். துன்பம் அணுகாது; எங்கும் நிறைந்த அவனைத் தாயை நீத்த சேய்போல் நெஞ்சமே நீத்தனையே. |
| முன்ன-நினைக்க. தெவிட்டா-வெறுப்புத் தட்டா. கன்னல்-கரும்பு. இன்னல்-துன்பம். சேய்-பிள்ளை. |
| 13 |
| கடவுளைத் தொழாது காலம் கழித்தல் நன்றன்று |
30 | ஆயுணாள் சிலவெங் காம மனந்தர்நோய் சோம்பு கொண்ட காயமே வளர்க்க வென்னில் கருமங்கள் செயலிவ் வாறே தேயுநாள் கழிய நிற்குஞ் சேடநா ளற்ப மாகுந் தூயநா தனைத்தொ ழாமல் தொலைக்கின்றா யழியு நெஞ்சே. |
|
| வாழ்நாள் மிகவும் சுருக்கம்; காமம். தூக்கம், நோய், மடி முதலியன நிறைந்த உடம்பு. இதை வளர்க்க வினைசெய்தல் வேண்டும். இப்படியே வாழ்நாள்கள் கழிந்து தேய்கின்றன. எஞ்சிய நாள் குறைவு; அந்த நாளையும் கடவுளைத் தொழாது தொலைக்கின்றாய் நெஞ்சமே. |
| ஆயுள்-வாழ்நாள். அனந்தல்-தூக்கம். சேடம்-மிச்சம். |
| 14 |
| கடவுளை அகத்தில் காண்பதே காட்சி |
31 | பொங்கலை ஆழி தாண்டிப் பொருப்புகள் கடந்தோ யாமல் அங்குமிங் குந்தி ரிந்தே யழிந்துபோ முடலைக் காப்பாய் எங்கணு முள்ளோன் றாளுன் னிருக்கையி னிருந்து போற்றிப் பங்கமில் சுகம்பெற் றுய்யப் பாரமென் பகராய் நெஞ்சே. |
|
| நெஞ்சே அழிந்துபோம் உடலைக் கடல்தாண்டியும், மலை கடந்தும் எங்கும் திரிந்து காப்பாய். இருந்த இடமிருந்து ஆண்டவனைத்து தொழுபேரின்பமடைய வருத்த மென்னே? |
| 15 |