பக்கம் எண் :

130

 நீதிநூல்
 
 பொன்னைப் புதைப்பார் வாயில் மண்ணே புதையும்
276
பொன்னைமா நிலத்தில்யான் புதைக்கும் ஏல்வையின்
அன்னையே யனையபா ரருளி நோக்கிநற்
சொன்னமென் வாயிடைச் சொரியு முன்றன்வாய்க்கு
என்னையே யிடுவனென் றிசைத்திட் டாளரோ.
 கடும்பற்றுள்ளவன் பொன்னை நிலத்தில் புதைத்தான். அப்பொழுது தாயையொத்த நிலமகள் அவனைப் பார்த்து அருள்கூர்ந்து என்னிடம் பொன்னைச் சொரியும் உன் வாய்க்குக் கைம்மாறாக என்னையே (மண்ணையே) இடுவன் என்று இசைத்தாள்.
 
மண்ணையிடுதல்-பொருளிழந்து போதல். இசைத்திட்டாள்-கூறினாள்.
 2
 பாத்துண்டலும் பலர்க்கீதலும் இல்லான்பொன் பாழே
277
பொலிவளந் தங்கிய புவியிற் றானுண்டும்
பலிபிறர்க் கிட்டுமே பயன்றுவ் வான்பொருள்
வலியிலாப் பேடிகை வாள்கொல் ஆணென
அலியினை மேவிய அரம்பை யேகொலோ.
 மிகுந்த செழிப்புள்ள உலகத்தில் தன் வயிறு ஆர உண்டும் வறியவர்கட்குக் கொடுத்தும் பயன் அடையாதவன் செல்வம், ஆண்மையில்லாத பேடி கை வாள் போலவும் அலியைப் பொருந்திய தெய்வப் பெண்போலவும் பயனிழந்து வீணாம்.
 பொலி-செழிப்பு. பலி-பிச்சை. அரம்பை-தெய்வப்பெண்.
 3

பயன்பெறாச் செல்வன் பாரந்தாங்கியும் கழுதையுமொப்பான்

278
நித்திய மனுபவி யாது நீணிதி
பத்திரஞ் செய்குவோன் பாரந் தாங்கவூர்
மத்தியிற் புதைத்தகல் மாசில் தூசர்க்கு
வத்திரஞ் சுமக்கும்வா லேய மொப்பனே.
 செல்வத்தை நாள்தோறும் நல்ல முறையாக நுகராது தொகுத்துக் காப்போன் ஊர் நடுவுள் சுமை தாங்க நாட்டிய சுமைதாங்கிக் கல்லையும், அழுக்ககற்றும் வண்ணார்க்கு ஆடை சுமக்கும் கழுதையையும் ஒப்பான்.
 நித்தியம்-நாள்தோறும். அனுபவியாது-நுகராது. பாரம்-சுமை. தூசர்-வண்ணார். வாலேயம்-கழுதை.
 4