பக்கம் எண் :

131

 கடிம்பற்று
 
 புதைக்கும் புல்லரை பொருள் குடி கெடுக்கும்
279
சொல்லவோர் போக்கின்றிச் செறிந்த நீர்கனல்
இல்லமே யழித்தெழுந் தேகல் போற்செலவு
இல்லையென் றடைத்தபொன் னெழுத்து தன்னைக்கொள்
புல்லரைக் குடிகெடுத் தகன்று போகுமே.
 போக்கிடமில்லா நீரும் நெருப்பும் தாமுள்ள வீட்டை அழித்துச் செல்லும். அவைபோல், செலவில்லையென்று புதைத்து வைக்கும் செல்வம், அறிவில்லாத அச் செல்வனைக் குடிகெடுத்துச் செல்லும்.
 
புல்லர்-அறிவில்லாதவர்.
 5
 செல்வச் சுமையினர் இரங்கார் சிறிதும்
280
வேம்புதே னீயுமோ வெயில்தண் ணாகுமோ
பாம்பமு தளிக்குமோ பரிவில் பூரியர்
தாம்பொதி யாளெனத் தாங்கும் பொன்னினைத்
தேம்புமா துலர்க்குளஞ் சிரந்த ளிப்பரோ.
 வேம்பு தேனையும், வெயில் குளிரையும், பாம்பு சாவா மருந்தினையும் தாராமைபோலக், கீழோர் பொன்னைச் சுமக்கும் பொதியாளர் ஆவதல்லாமல் வாடி வருந்தும் ஏழைகட்கு மனமகிழ்ந்து ஏதுங் கொடார்.
 தண்-குளிர்ச்சி. அமுது-சாவாமருந்து. பூரியர்-கீழோர். தேம்பும்-வாடும். ஆதுலர்-ஏழைகள்.
 6
 ஈயாச் செல்வன் சாவையே எவரும் விரும்புவர்
281
ஈகையில் லாதுபொன் ஈட்டு வோன்கொண்ட
தோகையு மைந்தருந் தொலைகி லானென
ஓகையா யருவிட முணவி லிட்டவன்
சாகையே கருதிமா தவஞ்செய் வார்களே
 ஈயாது பொன்னைமட்டும் தேடுவோனின் மனைவியும் மக்களும் அவன் சாவையே விரும்புவர். அதன்பொருட்டுச் சோற்றினில் நஞ்சு கலந்து கொடுக்கத் தவமும் செய்வர்.
 தோகை-மயில் போன்ற மனைவி. மைந்தர்-மக்கள் தொலைவு-சாவு. சாகை-சாதல்.
 7