பக்கம் எண் :

132

  நீதிநூல்
 

வேறு

  நன்றியில் செல்வக்காப்பு நச்சுமரக் காப்பாம்
282
அனுபவ மொன்றே பொன்னால்
  ஆயநற் பயனஃ தின்றேற்
புனலிலாத் தடத்தைப் பெய்யாப்
  புயலினைப் பொருவு மப்பொன்
தினமுமே நுகர்த லின்றித்
  தீனர்க்கும் வழங்க லின்றித்
தனமதைக் காத்தல் நச்சுத்
  தருவினைக் காத்தல் போலாம்.
 

செல்வத்தின் பயன் ஈதலும் பகுத்துண்டலும் ஆகிய நுகர்வாம். இவ்வுண்மை யறியார் பணத்தைத் தேடிக் காப்பர். இவர்கள் பணம் புனலிலாக் குளத்தையும் பெய்யா மழையையும் போலும். இப் பணமுள்ளவர் தாம் நுகர்தலும் ஈதலும் செய்யாது பொருளைக் காத்திருப்பது நச்சுமரத்தைக் காப்பது போலாம்.

 
அனுபவம்-நுகர்வு; அழுந்தியறிதல்.
  8
  எல்லாரும் தமதென்பர் இவறியான் பொருளை
283
தமதென உலோபர் ஈட்டுந்
  தனத்தினைக் கொடுங்கோன் மன்னர்
எமதென இருப்பர் கள்வர்
  எமதென்பர் கிளைஞ ரெல்லாம்
உமதெம தெனவா திப்பர்
  உலகென தென்னும் யாமும்
நமதென்போம் பாரம் தாங்கி
  நலிவதென் பிசின ரம்மா.
 

ஈட்டும் பணம் முழுவதும் தமக்கே என்று இறுமாப்புக் கொண்டிருக்கும் இவறன்மையுடையார் அப்பணத்தைச் சுமக்கும் சுமை தாங்கியாவர். அப் பணத்தைக் கொடுங்கோலர் தமதென்பர். கள்வர்கள் எமதென்பர். உறவினர்கள் ஒருவரோடொருவர் உமது எமதென்றுரைத்து வழக்காடுவர். உலகு தன்