| கடும்பற்று |
| னுடையது என்று சொல்லும். நாமும் நம்முடையது என்போம். அவன் இவற்றை மறுக்க முடியாது. |
| வாதிப்பர்-வழக்காடுவர். பாரம்-சுமை. |
| 9 |
|
வேறு | | ஏழைக்கு இடாமல் செல்வர்க்கு வழங்குதல் இழிவு |
284 | மெலியு மேழைக் கிடாமல் விளைபொன்னை மலியுஞ் செல்வர்க்கு வாரி வழங்குதல் நலியி லார்க்கருள் நன்மருந் தும்பெருகு ஒலிக டற்பெய் யுறையையும் ஒக்குமே. |
| ஊணின்றி மெலியும் ஏழைகளுக்கு உண்ண ஏதும் கொடாமல் நலம் தரும் பொருளை பெருஞ் செல்வர்க்கு வாரி வழங்குதல், நோயிலார்க்கு நல்ல மருந்து கொடுத்தலையும் கடலகத்து மழை பொழிதலையும் ஒக்கும். |
| விளை-(நலம்) தரும். மலியும்-பெருகும். நலி-துன்பம்; நோய். உறை-மழை |
| 10 |
| ஈயாக் கயமை இனம்விழை விலங்கினும் இழிவு. |
285 | வனவி லங்கும்விண் வாழ்பக்கி யுந்தந்தம் இனமோ டன்றியெ டாவிரை யேழைகட்கு அனமி டாதுதம் ஆகம தொன்றையே மனமு வந்து வளர்ப்பர் கயவரே. |
| காட்டில்வாழ் விலங்கும் வானத்துப் பறக்கும் பறவையும் தங்கள் தங்கள் இனங்களோடு கூடியல்லாது இரை எடாது. கீழோர்மட்டும் மக்களினமாகிய உயிர்கட்குச் சோறிடாது தம் உடம்பு ஒன்றையே மனமகிழ்ந்து வளர்ப்பர். |
| வனம்-காடு. பக்கி-பறவை. அனம்-சோறு ஆகம்-உடம்பு. |
| 11 |
| வேறு |
| பழம் உதிரா மரம்போல் பறிபடுவர் கயவர் |
286 | z தானற்கனி சிந்தாதுயர் தருவைச்சிலை கழியால் ஊனப்பட மோதிப்பழம் உதிர்ப்பாரென வுலகில் தீனர்க்குவ ழங்காதுறை தீயன்பசி யுளரால் மானத்தையி ழந்தேபொருள் வவ்வப்படு வானே. |