| நீதிநூல் |
| நல்ல பழங்களைத் தாமே தராது வான் அளாவி வளர்ந்துயர்ந்த மரங்களைக் கல்லாலும் கழியாலும் எறிந்து பழங்களை உதிர்ப்பர். ஏழைகட்கு வழங்காது வாழ்கின்ற கொடியவன் மிக்க பசியுள்ளவரால் வைது அடித்து வலுச்செய்து பொருள் முழுதும் பறிக்கப் படுவன்1 |
| கனி-பழம். தரு-மரம். சிலை-கல். தீனர்-ஏழை. |
| 12 |
|
கொடாக் கண்டனுயிர் கொள்வரப் பணத்தால் | 287 | சாங்காலையோர் பிசினன்பொரு டானஞ்செய வுன்னித் தேங்கான்மொழி மனைமைந்தரை விளித்தானவர் தெரிந்தே ஆங்காயவ னுரையாவித மவன்மேல்விழுந் தழுதார் தாங்காதவ னுயிர்தீர்ந்தனன் தனம்போற்பகை யுளதோ. |
|
| ஓர் இவறன்மையுடையான் தான் சாகும்போது பொருளைத் தானம் செய்யவேண்டுமென்று நினைத்துத் தேன்போலும் சொல்லையுடைய மனைவியையும் மைந்தரையும் அழைத்தான். அவர்கள் அவன் கூப்பிடுங் குறிப்பு உணர்ந்தனர். அவ்விடத்து அந் நோக்கமுடைய அவன் அச் சொல்லைச் சொல்லவிடாதபடி அவர்கள் அவன்மேல் விழுந்து அழுதார். அவர்கள் தன்மேல் விழுந்தது தாங்காது இழுத்துக்கொண்டிருந்த மூச்சு நின்று உடனே இறந்தான். அவனுடைய பணமே அவன் சாவுக்குக் காரணமாயிருந்ததால், பணம்போல் கொடிய பகை வேறுண்டோ? |
| பிசினன்-இவறன்மையுடையான்; உலோபி. தேம்-தேன். விளித்தான்-அழைத்தான். ஆங்கு-அவ்விடத்து. ஆயவன்-அப்படிப்பட்டவன். |
| 13 |
| 1. ஈர்ங்கை, திருக்குறள், 1077 |
| ------ |