| அதி. 24-சோம்பல்
|
| மடியராய் உழையாதார் மரம் சவம் ஆவரே |
288 | சிற்றெறும் பாதியாச் சீவ கோடிகள் முற்றுமெய் யுழைத்துயிர் முறையிற் காக்குமால் சற்றுமெய் யசைவிலாச் சழக்க ராருயிர் அற்றவோர் சவங்கொன்மற் றசர மேகொலோ. |
|
| சிறிய எறும்பு முதல் பெரிய யானைவரை எல்லா உயிரினங்களும் உழைத்து முறையாகத் தம் உயிரைக் காக்கின்றன. உடல் ஒருசிறிதும் அசையாது மடியராய் இருக்கும் தீயோர் உயிர் அற்ற சவமோ? அல்லது நிலைத்திணையாகிய பட்ட மரமோ? |
|
1 | | உழையாது சோம்புவோர் ஒரு பெருந் தீயரே |
289 | விடக்குறுஞ் சடம்பல வேலை செய்தற்கா நடக்கவு மோடவு நனியு றுப்புகள் மடக்கவு நீட்டவும் வாய்ந்த தாற்சும்மா கிடக்குமெய்ச் சோம்புளோர் கேடு ளார்களே. |
|
| இறைச்சி நிறைந்த அறிவில்லதாகிய இவ்வுடல் வேலை செய்தற் பொருட்டே, உறுப்புகள் நடக்கவும், ஓடவும், மடக்கவும், நீட்டவும் பொருத்தமாக வாய்ந்தன. அப்படியிருந்தும், வேலை செய்யாது அவ் வுறுப்புகளை வறிதே கிடக்கும்படி செய்வோர் தீயவராவர். |
| விடக்கு-இறைச்சி. சடம்-அறிவில்லது; உடல். சும்மா-வறிது. |
| 2 |
| குடும்பம் பேணுவோர் சோம்பலை கொள்ளார் |
290 | தெளிவுற நூல்பல தினமும் வாசித்து மிளிருடல் வருந்தியும் வெறுக்கை யீட்டிநற் கிளிமொழி மனைவியைக் கிளைஞ ரைப்பல எளியரைத் தாங்குவோர்க் கில்லை மந்தமே. |
|
| மெய்ந்நூல்களை நாடோறும் தெளிய ஓதி, விளங்கும் உடல் வருந்தப் பாடுபட்டுப் பணம்தேடி, கிளிமொழி போன்ற மனைவியையும் கிளைஞர்களையும் பல எளியவர்களையும் பேணிவருவோர்க்குச் சோம்பல் உண்டாகாது. |
| தெளிவுற- (ஐயந்திரிபின்றிச்) செம்மையாக. வெறுக்கை-பணம். மந்தம்-சோம்பல். |
| 3 |