| நீதிநூல் |
| வேறு |
| வறுமை, பாவம், துன்பம் சோம்பலால் வரும் |
291 | மடிசேரு மவர்க்கொரு நாளுமறல் விடியாதவர் நெஞ்சிடை வெந்துயரே குடியாகு மறந்தொடர் குற்றமெலா நெடிதாக வளர்ந்திடு நிச்சயமே. |
|
|
ஒன்னார்க்கு அடிமைப்படுத்தும் வன்மைவாய்ந்த மடியை மேற்கொள்வார். எப்பொழுதும் வறுமைப்பிணி நீங்கார்; மனத்திடத்துக் கடுந்துன்பம் குடிகொள்ளும். பாவம் சேரும் தீமைகளெல்லாம் வளரும்; இவை உறுதியேயாம். | | மடி-சோம்பல். மறல்-வறுமை. மறம்-பாவம். நிச்சயம்-உறுதி. |
| 4 |
| வேறு |
| கொடுமையும் களவும் கொள்வர் சோம்பரே |
292 | பாரெல் லாமாள் வேந்தரு நூல்தேர் பண்போருஞ் சீரெல் லாஞ்சூழ் செல்வரு மந்தஞ் சேராரே நேரில் லாமா பாதகர் தீனர் நெடுஞ்சோரம் ஊரெல் லாஞ்செய் துய்பவர் மாசோம் புடையாரால். |
|
| உலகையாள் வேந்தரும் கற்றுவல்லபுலவரும் சிறப்பெய்தும் செல்வரும் சோம்பலுடையவராயிரார். பெரும் பாதகரும் கொடியவரும் ஊரெல்லாம் களவு செய்யும் பெருங் கள்ளரும் மிக்க சோம்புதல் உடையவராவர். |
| பார்-உலகம். மந்தம்-சோம்பல். தீனர்-கொடியவர். சோரம்-களவு. |
| 5 |
| உழையாச் சோம்பர் பெருவசை உறுவர் |
293 | எய்யா வம்பே வல்லிசை மாறி யிருமென்று மெய்யா விரத மாழி யொடுங்கெட் டொழியுந்தம் மெய்யா னதுவே வியர்வை யுறப்பல் வினைகையாற் செய்யா தவரே நோய்பல வுற்றுத் தேய்வாரே. |
|