பக்கம் எண் :

137

  சோம்பல்
 
  நெற்றி வியர்வை நிலத்தில் விழ உடம்பு வருந்திப் பாடுபடாதவர் பல நோய் உற்று மாய்வர். இசையிழந்து வசை பெறுவர். கொண்ட கொள்கையும் கெட்டழிவர்.
  வம்பு-வசை. வல்லிசை-உறுதியான புகழ். விரதம்-கொள்கை
  6
 
வேறு
  உடல் அசையார் உறுவர் பெரும்வசைப்
294
அசையும் வளிபுவி அசையும் அனல்சலம்
  அசையும் மரம்விளை பயிரெலாம்
விசையி னொடுமவை யசைவ திலையெனில்
  விளியு மெனல்நிசம் நரர்கள்தந்
தசைகொள் உடல்நிதம் அசைய வினைபல
  தரணி மிசைபுரி கிலரெனில்
இசையும் வலிகெடும் நலிகள் அடுமுறும்
  இசையின் மிசையொடு வசையுமே.
  காற்று நிலம் நெருப்பு நீர் முதலியன அசையும். மரம் பயிர் முதலியவும் அசையும். இவையெல்லாம் விரைவுடன் அசையவில்லையானால் அழிவெய்தும் என்பது உண்மை. இவைபோன்று மக்களும் தம் உடம்பு அசையும்படி உலகில் பல செயல் செய்யாராயின் பொருந்திய உடல்வலி கெடும். துன்பங்கள் வருத்தும் புகழின்மேலாக இகழ்வு பெருகும். .
  இசை-புகழ். மிசை-மேல். வசை-இகழ்.
 

7

 

------