| அதி. 25-சினம் |
| மெலியரைச் சினப்போர் ஆழ்வர் மீளாநரகில் |
295 | வலியரைச் சினப்போர் வரையினின் மோது மட்கல மெனவுடைந் தழிவார் பொலிவுறத் தமையொப் பவர்களைச் சினப்போர் புலியிரண் டொன்றையொன் றடித்து மெலிவொடு இரண்டுங் கெடுவபோற் கெடுவார் மெலியரை வெகுளுவோர் வேங்கை எலியினை யெதிர்த்த தன்மைபோ லிழிவுற் றெரிநர கிடையமிழ்ந் துவரே. |
|
| ஆறவேண்டிய சினம் மீறி மிக்கோரைச் சினந்தால் மலையில் மோதும் மட்கலம் போன்று சினந்தவர் அழிவர். ஒத்தவரைச் சினந்தால் இரண்டு புலி ஒன்றோடொன்று சண்டையிட்டு இரண்டும் கெடுவபோல் கெடுவர். தாழ்ந்தாரைச் சினந்தால் வேங்கைப் புலி, எலியை எதிர்த்துப் பழி பெறுவதுபோல் இகழ்வெய்தித் தீவாய் நரகில் அழுந்துவர். |
|
வலியர்-மிக்கார். மெலியர்-தாழ்ந்தோர். | | 1 |
| வேறு |
| மெலியர்பால் சினம் வேண்டுமென்றே கொள்வர் |
296 | எம்மை யுந்தெரி யாமலிச் சினம்வந்த தென்பீர் உம்மை நோய்செயும் வலியரை வெகுண்டிடா தொளிப்பீர் இம்மை வாழ்விலா எளியர்பாற் றினமுமக் கெய்தும் வெம்மை நீரறிந் தோவறி யாமலோ விளம்பீர். |
|
| உமக்குத் துன்பஞ் செய்யும் வலியவர்மேற் சினம் வந்தால் அச்சினத்தை யடக்கி மறைக்கும் நீர், வலிமையில்லாத எளியவர் பால் சினங் கொள்வது உமக்குத் தெரிந்தா? தெரியாமலா? தெரியாமல் வந்ததென்று நீர் சொல்லுவது பொருந்துமா? |
| 2 |
| சினங்கொள்வார் நெஞ்சுடற் சேருந் துன்பம் |
297 | கண்சி வந்திட மெய்யெலா நடுங்கிடக் காலான் மண்சி தைந்திட வுதைத்துநாக் கடித்திதழ் மடக்கி எண்சி தைந்திடச் சினங்கொள்வீர் நும்மெயோ டிதயம் புண்சு மந்தத லாற்பிறர்க் கென்குறை புகல்வீர் |
|