| சினம் |
| தீப்போற் கண் சிவப்பேற உடம்பெலாம் நடுங்க மண்ணைக் காலால் உதைத்து நாக்கைப் பல்லால் கடித்து உதட்டை மடக்கிக் கருத்தழியச் சினங் கொள்வீர். அச்சினத்தால் உம்முடைய நெஞ்சந் துடிக்கும்; உடம்பெலாம் கொப்புளிக்கும். இவற்றையன்றிப் பிறர்க்கு என்ன குறையுண்டு சொல்வீர். |
| இதழ்-உதடு. எண்-கருத்து. இதயம்-நெஞ்சு. புண்-கொப்புளம். |
| 3 |
| தன்னுருவம் தான்தேறாத் தகைசினத் தால்வரும் |
298 | கோட வாண்முகஞ் சுழித்திதழ் மடித்தொழில் குலையச் சேடன் மீதியான் சினமுற்ற பொழுதெதிர் திகழும் ஆடி நோக்கயா னியான் கொன்மற் றார்கொலன் றயிர்த்துத் தேடி நோக்கவோர் குரூபமே கண்டுளந் திகைத்தேன். |
|
| ஒளிபொருந்திய முகத்தைக் கோணவைத்துச் சுருக்கு விழ உதட்டை மடித்து அழகுகெட வேலையாள்மேல் சினங்கொண்டேன். அப்பொழுது என் எதிரிலிருந்த கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்தேன். எனக்கே ஐயம் உண்டாகிவிட்டது. யான் யானா? மற்று யாரோ? என்று. நன்றாக ஆராய்ந்து பார்க்க என் தீய உருவமே கண்டு உள்ளந் திகைத்தேன். |
| கோட-கோண. சுழித்து-சுருக்கி. எழில்-வளரும் அழகு. சேடன்-வேலாயாள். ஆடி-கண்ணாடி. குரூபம்-தீய உருவம். |
| 4 |
| சினமுளோன் இறக்கின் சேர்ந்தாரும் மகிழ்வர் |
299 | சினமு ளோன்மனை மைந்தர்க ளவன்வெளிச் செல்லுந் தினமெ லாந்திரு விழவுகொண் டாடுவர் செல்லாது இணையன் தங்குநா ளிழவுகொண் டாடுவ ரிறப்பின் மனையி லோர்பெரு மணவிழா வந்தென மகிழ்வார். |
|
| சினமுள்ளவனின் மனைவியும் மக்களும் அவன் வெளியில் போகும் நாளெல்லாம் வீட்டில் திருழவிழாக் கொண்டாடுவர். வெளியில் போகாது வீட்டில் தங்குநாளில் இழவு கொண்டாடுவர். அவன் இறந்தால் அன்று வீட்டில் திருமண விழா வந்ததுபோல் மகிழ்வர். |
| இனையன்-இப்படிப்பட்டவன்; சினமுள்ளவன். |
| 5 |