பக்கம் எண் :

140

 நீதிநூல்
 
 சினமுளார் நச்சுயிர்சேர் துன்புறுவர்
300
நாளு நாங்கொளுந் துயர்க்கெலாங் காரண நாடின்
மூளுஞ் சீற்றத்தின் விளைவதா முனிவக முடையோர்
தேளும் பாம்பும்வெஞ் சினவிலங் கினங்களு நனிவாழ்ந்து
ஆளுங் கானில்வாழ் பவரெனத் தினமஞ ரடைவார்.
என்றும் நாம் அடையும் துன்பத்திற்குக் காரணம் சினமேயாம்.
 உள்ளத்தில் சினமுடையோர் தேள் பாம்பு கொடிய விலங்குகள் முதலியன மிகுதியாக வாழ்ந்து ஆட்சிசெய்யும் கொடுங்காட்டில் வாழ்பவர் போன்று நாள்தோறும் நீங்காத் துன்பம் அடைவார்.
 
நாளும்-என்றும். முனிவு-சினம். அகம்-உள்ளம். தினம்-நாள்தோறும். அஞர்-துன்பம்.
 6
 அறிவிலா வேலையாளைச் சினப்பது அறமன்று
301
தழையுஞ் செல்வத்துட் பிறந்துநல் லோரவை சார்ந்து
பிழையில் நூலெலா முணர்ந்துநீ வைகலும் பிழைத்தாய்
இழையுந் தீனராய்ப் பிறந்துகற் றிடவகை யில்லா
உழையர் செய்பிழைக் காமுனிந் தனையிதென் னுளமே.
 உள்ளமே! வளரும் செல்வத்துட் பிறந்து நல்லோர் கழகம் சேர்ந்து குற்றமற்ற நூல்களையெல்லாம் உணர்ந்து நாடோறும் நீ வாழ்கின்றாய். மூச்சுவிடவும் வலியில்லாத வறியராய்ப் பிறந்து கற்க வகையில்லாமல் உன்னையன்றிப் புகலிடமில்லாமல் வேலை செய்யும் உன் வேலையாளைச் சினப்பது தகுதியா?
 தழைதல்-வளர்தல். அவை-கழகம். வைகலும்-நாள்தோறும். உழையர்-வேலையாள்.
 7
 வேறு
 கடுஞ்சினம் கோடல் கல்அம்பைக் கடிதலாம்
302
பைதலே யெய்த லாதிப் பரன்செய லாமப் பைதல்
செய்தவர் தமைச்சி னத்தல் சினவரா தன்மேற் கல்லைப்
பெய்தவன் தனைவிட்டக்கல் பிளந்திடப் பொரலுங் கையால்
எய்தவன் தனைவிட் டம்பை முனிதலு மேய்க்கு மாலோ.
 துன்பம் வருதல் நம் செய்வினைக்கீடாக முழுமுதற் கடவுள் ஆணையாம். அத்துன்பத்தை நேர்நின்று செய்தவரிடம் சினம்