பக்கம் எண் :

141

  சினம்
 
  கொள்ளல் சினங் கொள்ளப்போதல் தம்மேற் கல் எறிந்தவனை விட்டு விட்டு அக்கல்லைப் பிளக்கச் சண்டை செய்வதையும் அம்பெய்தவனை விட்டு விட்டு அம்பை முனிவதையும் ஒக்கும்.
  பைதல்-துன்பம்.
  8
 
விலங்கோ டறிவில் சிறார்பித்தர் கிழவர் வெகுள்வர்
303
தெருளுறு விலங்கி னுக்கும் தெளிவறி யாச்சி றார்க்கும்
மருளுறு பித்த ருக்கும் மடவிருத் தருக்கும் கோபம்
பொருளலால் அயலோர்க் கில்லை புகன்றவிந் நால்வ ரேயோ
அருளுறு சினமீக் கொள்வார் அனையருள் ஒருவ ரேயோ.
  தெளிவில்லாத காட்டுக் கொடிய விலங்குகளும் நல்லறிவு வாயாத சிறுபிள்ளைகளும், மயக்கமுடைய பித்தரும், அறிவில்லாத முதியோரும் சினங்கொள்வதல்லால், மற்றையோர் சினம் கொள்ளார். சினம் கொண்டால், சினம் கொண்டவர் இந்நால்வரோ அல்லது அவருள் ஒருவரோ?
  தெருள்-தெளிவு. மருள்-மயக்கம். மடம்-அறியாமை. விருத்தர்-முதியோர்.
  9
  சினத்தால் வெற்றி பகைக்கே சேரும்
304
பெற்றதன் நாட்டை யாளான்
  பிறர்நாட்டை யாள்வான் கொல்லோ
உற்றதன் சீற்ற மாற்றி
  உரத்தொடு தனைத்தான் வெல்லக்
கற்றறி யானொன் னாராங்
  கனலிக்கோர் வையே யாவன்
கொற்றமவ் வொல்லார் கொள்வார்
  கோபம்போல் தாப* முண்டோ.
  தன் நாட்டை ஆளத்தெரியாதவன் பிறர் நாட்டை எப்படி ஆளுவான்? தன் சினத்தை அடக்கித் தன்னையே வெல்லத் தெரியாதவன் பகைவனை எப்படி வெல்லுவன்? சினமுள்ளவன் பகைவனுக்குத் தீ முன்பட்ட வைக்கோலாவன். அதனால் பகைவனே வெல்லுவான். கோபம்போல் பெருந்தீ வேறொன்றில்லை.
 
*சினமென்னும். திருக்குறள், 306