| நீதிநூல் |
| கனலி-நெருப்பு. வை-வைக்கோல். கொற்றம்-வெற்றி. தாபம்-தீ. |
| 10 |
| வேறு |
|
செய்வோரைத் திருத்தவே செய்கையிற் சினமுறல் | 305 | உருமினை யஞ்சியாரு மிகழுவ ரன்றியாய ஒலிதரு கின்றகாரை முனிவரோ தருவுறை கின்றதீய முயிறுக ளன்றியாய தருவைவெ குண்டுசீறல் தகுதியோ அருமறம் மீதுபகை செயலன்றி நாளுமவை புரிகின்ற தீய அசடர்பால் பெருமுனை கொண்டுகாய்தல் அழகல வென்றுகோதில் பெரியவர் என்றும்ஆள்வர் கலரையே. |
|
| இடிமுழக்கங்கேட்டு எல்லோரும் நடுங்கி அவ் இடியை இகழுவர். இடிக்கு இடமாகிய மேகத்தைச் சினப்பரோ? (சினவார்.) பெரிய மரங்களில் தங்கியிருக்கும் கடிஎறும்பைச் சினப்பதல்லாமல் அம்மரங்களைச் சினத்தல் பொருத்தமாகுமோ? பாவத்தின்மீது பகையின்றிப் பாவவினையைச் செய்யும் மூடர்பால் சினந்து கொள்ளுதல் சீராகுமோ? இவை எல்லாம் தக்கன ஆகாவென்று குற்றமற்ற பெரியவர் எந்நாளும் அத்தீயவர்களைத் திருத்தி நல்வழிப் படுத்துவர். |
| உரும்-இடி. தரு-மரம். முயிறு-கடிஎறும்பு. அரும்-கொடிய. மறம்-பாவம். அசடர்-மூடர். கோதில்-குற்றமில்லாத ஆள்தல்-நல்வழிப்படுத்தல். கலர்-தீயவர். |
| 11 |
| ------ |