| அதி. 26-பொறாமை |
| பேராசை யுள்ளோர் பெருங்கே டெய்துவர் |
306 | மாங்கனி வாயிற் கவ்வி மரத்திடை யிருக்கு மந்தி பாங்கர்நீர் நிழலை வேறோர் பழமுணுங் குரங்கென் றெண்ணித் தாங்கரு மவாவிற் றாவிச் சலத்திடை யிறந்த தொப்ப நீங்கரும் பொறாமை யுள்ளோர் நிலத்திடைக் கெடுவர் நெஞ்சே. |
|
| குரங்கு மாம்பழத்தை வாயில் பற்றிக்கொண்டு மரத்திடை யிருந்தது. பக்கத்து நீரில் தன் நிழல் தோன்றிற்று. அதை வேறொரு குரங்கு பழம் வாயில் வைத்திருப்பதாக நினைத்தது. அதைப் பிடுங்க ஆசைகொண்டது. நீரில் பாய்ந்து இறந்தது. இதைப்போன்று பொறாமைப் படுகிறவர்கள் உலகத்தில் கேடடைவார்கள். |
| கனி-பழம். கவ்வி-பற்றி. மந்தி-குரங்கு. பொறாமை-பேராசை. |
| 1 |
| வேறு |
| பொய்இன்ப துன்பைப் பொறாமையான் கொள்வன் |
|
307 | தாரணியி லெவரேனுந் துயருறிற்றன் தலையின்முடி தரித்த தொப்பாஞ் சீரணியுஞ் செல்வமவர் படைத்திடிற்றன் தாய்மனைசேய் செத்த தொப்பாங் காரணமே யொன்றுமின்றிச் சுகதுக்கந் தன்வலியாற் கணத்துக் குள்ளே பூரணமா வாக்கிடுவோன் பொறாமையுளோன் அன்றியெவர் புவியின் கண்ணே. |
|
| பிறர்வாழ மனம் பொறுக்காத் தீயோருக்கு உலகில் யார் துன்புறினும் தந்தலையில் முடி சூடியது ஒப்பாம். பிறர் செல்வம் |