பக்கம் எண் :

144

 நீதிநூல் 
 
 

பெற்றார்களானால் தங்கள் தாய், மனைவி மக்கள் செத்த தொப்பாம்.
இப்படி ஒரு காரணமுமின்றி நொடிப்பொழுதினுள் தங்கள் மனத்துள்ளே இன்ப துன்பங்களை ஆக்கிடும் வன்மை பொறாமையுள்ளவர்க்கன்றி எவர்க்கு முடியும்?

 

தாரணி-உலகம்.

 

2

 

பொறாமையால் பயன்வாரா பொருந்தும் பெரும்பாவம்

308
வவ்விடலே முதலாய வினையாலொவ்
    வோர்பயன்கை வந்து கூடும்
அவ்வினைக ளியற்றவெவ்வே றிடங்கருவி
    சமையமும்வந் தமைய வேண்டும்
எவ்விடத்தும் எப்பொழுதும் ஒழியாமல்
    எரியென்ன இதயந் தன்னைக்
கவ்வியுண்ணு மவ்வியத்தாற் கடுகளவு
    பயனுளதோ கருதுங் காலே.
 

கவர்தல் முதலாகிய தீமைகளால் ஒவ்வொரு பயன் வந்து கை கூடும். அதற்கும் இடம், கருவி, காலம் எல்லாம் பொருத்தமாக அமையவேண்டும். உள்ளத்தைத் தீப்போற் கவர்ந்து மேலெழும் பொறாமைக் குணத்துக்கு இடம், காலம் ஏதும் வேண்டா. எப்பொழுதும் நிகழும். ஆனால், அதனால் கடுகளவு பயனும் கிடையாது.

 வவ்விடல்-கவர்தல். சமையம்-காலம்.
 

3

 

வேறு

 

பொறாமைத் துன்பத்தால் பொருந்திடா தப்பொருள்

309
ஆண்டெ லாம்பிற ராக்க நோக்கியே
மீண்டு மீண்டுநெட் டுயிர்ப்பு வீங்கினுந்
தாண்டி யவர்தனந் தாழ்ந்துன் கைமிசை
ஈண்டுச் சேருமோ இதயமே சொலாய்.
 

ஆண்டு முழுவதும் பிறர் வாழ்வைக் கண்டு மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டு வயிறு பொருமினாலும், அவ்வாழ்வு அவரை விட்டு விலகி கைக்கு வந்து சேராது; நெஞ்சமே இதைக் கருதிப்பார்.

 ஆக்கம்-செல்வம்; வாழ்வு. நெட்டுயிர்ப்பு-பெருமூச்சு. வீங்கினும்-பொருமினாலும்.
 

4