பக்கம் எண் :

148

 நீதிநூல் 
 
 

இவைபோன்று ஒன்றறிவோர் ஒன்று அறியாராவர். ஆதலால் எல்லாம் அறிந்தோமென்று செருக்குக் கொள்பவர் பாவத்தைப் பெருக்கியவராவர். மேலும் தம்மையே வஞ்சித்தவரும் ஆவர்.

 

அத்திரம்-படைக்கருவி. எய்தல்-எறிதல். சித்திரம்-ஓவியம். தருக்கு-செருக்கு. பெருக்கு-(பாவம்) பெருக்குதல். திருக்கு-வஞ்சனை.

 

3

 

வேறு

 

நூல்கற்றுச் செய்யுள் நுவல்வதால் செருக்கலென்?

317
பருத்திவிதைத் தெடுத்துநூ லாக்கி யாடை
    பண்ணியளித் தாலுடுத்தல் பார மாமோ
திருத்திமண்ணிற் செந்நெல்விதைத் தரிசி யாக்கித்
    தீஞ்சோறட் டூட்டிலுண்ணச்செவ்வாய் நோமோ
அருத்தமொடு மிலக்கணங்க ளிலக்கி யங்கள்
    அரியநூல் பலமுன்னோ ரளித்த தாலே
கருத்தேயந் நூல்கள்சில கற்று ணர்ந்து
    கவிசொல்லல் வியப்பன்று கர்வ மென்னே.
 

பருத்தியைப் பயிராக்கி நூலெடுத்து ஆடைசெய்து தந்தால் உடுத்தல் வருத்தமா? நெல்லை விதைத்து அரிசியாக்கிச் சோறு தந்தால் உண்ண வாய் நோவுமா? முன்னுள்ளோர் இலக்கண இலக்கியங்கள் முடிய அமைத்துத் தந்துள்ளார்கள். அவற்றுள் சில கற்றுக் கவிசொல்லும் நெஞ்சே! ஏன் செருக்குக் கொள்கின்றாய்? இவ்வாறுள்ள நிலையில் பாட்டுப்படுவது ஒரு புதுமையன்று.

 அடுதல்-சமைத்தல். வியப்பு-புதுமை. கர்வம்-செருக்கு.
 

4

 

வேறு

வெயில்முன் கல்லார் விளக்குமின் மினியே

318
இயலொடு தமிழ்மூன்று மெள்ளவுந் தேராய்
அயர்வறு கலைஞான மறுபதி னோடுநான்கும்
பயனொடு தேர்வாரே பலருள ரவர்முன்நீ
வெயிலின்முன் இடுதீப மின்மினி யாநெஞ்சே.
 

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழையும் அதனதன் தன்மையுடன் ஒரு சிறிதும் உணர்ந்தாயில்லை. கவலொழிக்கும்