| கல்விச் செருக்கு |
| கலைகள் அறுபத்து நான்கும் கற்றுப் பயன் தெளிவார் பலர். அவர் முன்னிலையில் நெஞ்சே நீ கதிரவன்முன் வைக்கப்படும் விளக்கும் மின்மினியும் போல் ஆவாய். |
| இயல்-தன்மை. அயர்வு-கவலை. |
| 5 |
| வேறு |
| உண்மை யுணராது செருக்கல் ஒவ்வாது |
319 | எறும்புதன் பிலத்தைத் தன்னை யாவுமென் றுனல்போல் அண்டத்து உறும்புவ னங்க ளெண்ணில் உவைமுன்னம் நரரும் பாரும் இரும்புமுன் அணுவோ வாழி யெதிரொரு துளியோ நில்லாது அரும்படி வத்தின் மாக்கள் அகம்அகம் மிகல்த காதால். |
|
| சிற்றெறும்பானது தன்னையும் தன் குழியையுமே எல்லா உலகமும் என்று எண்ணுவதுபோல், அண்டத்தைச் சார்ந்த புவனங்களுக்கு அளவு இல்லை. அவைகளுக்கு முன் மக்களும் இந்த உலகமும் மலைக்குமுன் அணுவோ ஒரு துளியோ ஆகா. நிலையில்லாத உடம்பினை யுடைய மக்கள் உள்ளத்துச் செருக்குக் கூடும்படி செய்வது பொருத்தமாகாது. |
| பிலம்-வளை; குழி. புவனம்-உலகம் இறும்பு-மலை. அணு-மிகச் சிறியது. அகம்-உள்ளம். அகம்-செருக்கு. மிகல்-கூடுதல். தகாது-பொருந்தாது. |
| 6 |
| |