| |
| அதி. 28- அழகாற் செருக்கல் |
| ஆடையணி நீக்கின் அழகொன்றும் இன்று |
320 | எழிலு ளேமெனச் செருக்குறு நெஞ்சமே யிழைதுகில் நீத்தங்கம் கழுவிடாதுற நோக்குதி முகந்தனைக் கஞ்சந் தனில்நோக்கின் எழுநி லத்திடை யுன்னின்மிக் காருள ரெனவறி வாயீமத்து அழியும் வெண்டலை யுன்றலை போலிருந் தவணுற்ற தறிவாயே. |
|
| நெஞ்சே நீ `அழகு மிகுதியாய் இருக்கிறோம்ழு என்று எண்ணித் தற்பெருமை கொள்ளாது இரு. உன்னுடைய ஆடையணியையும் அகற்றி, உறுப்புக்களையும் கழுவாது கண்ணாடியில் உன் முகத்தைப் பார். பார்த்தால் உலகத்தில் உன்னைவிட அழகின் மிக்கவர்கள் இருக்கிறார்கள் என்று அறிவாய். சுடுகாட்டில் புறக்கணிக்கப் பட்டுக் கிடக்கும் வெள்ளிய தலைமண்டை உன் தலைபோல் முன் இருந்துதான் அங்குப் போய்ச் சேர்ந்ததென்று அறிந்துகொள். |
| எழில்-அழகு. இழை-நகை; அணி. நீத்து-அகற்றி. அங்கம்-உறுப்பு. கஞ்சம்-கண்ணாடி. |
| 1 |
| வேறு |
| உறுப்புடல் அழகெலாம் எலும்புமாய் ஒழியும் |
|
321 | தோல்வாசம் துறந்திறந்து கிடந்தஅழ கியைக்காணச் சுடலை சென்றோம் கோல்போன்ற வெள்ளென்பின் குவையொன்றே கண்டனஞ்செங் குமுத வாயும் நூல்போன்ற இடையுமன நடையுமணி தனமுமதி நுதலும் வாய்ந்த சேல்போன்ற விழியும்பான் மொழியுங்கா ணாமலுளந் திகைத்தோமன்னோ. |
|
| அழகும் மணமும் நீங்கி இறந்துகிடந்த அழகியென்னும் பெயருடைய பெண்ணைக் காணும்பொருட்டுச் சுடுகாட்டுக்குச் சென்றோம். கரும்புபோல் காணப்படும் எலும்பின் குவியலைக் கண்டோம். செவ்விய குமுத மலரையொத்த வாயும், இழையொத்த மெல்லிய இடையும், அன்னம்போன்ற நடையும் அழகிய கொங்கைகளும், எட்டாம் பிறைபோன்ற நெற்றியும் |