பக்கம் எண் :

152

 நீதிநூல்
 
 

கவரும்-இழுக்கும். கவின்-அழகு. அனுதினம்-நாளும். பெட்புற-விரும்ப. ஒளிர்-விளக்கம். ஓங்கல்-மலை. மானும்-ஒக்கும். எழில்-ஓங்குமழகு.

 

4

 

வேறு

 

நயனிலான் உடலழகை நல்லோர் நயவார்

324
மண்ணிற்செய் பாவைமீது வயங்குபொற் பூச்சோ தண்பூங்
கண்ணியை மாற்றிச் சூடுங் காட்சியோ பழம்பாண் டத்திற்
பண்ணிய கோல மோநற் பண்பொடு ஞானங் கல்வி
புண்ணிய மேது மில்லான் பூண்டபே ரெழிலு டம்பே.
 

குணம் மெய்யுணர்வு படிப்பு நலத்தொண்டு முதலிய ஒன்றுமில்லாதவன் கொண்டுள்ள உடலழகு, மண்பாவைமீது பூசும் பூச்சோ? அழகிய பூமாலையைத் துடைப்பத்தில் கட்டிக் காணும் காட்சியோ? பழைய ஏனத்தில் செய்த அழகோ?

 வயங்கு-விளங்கு. மாறு-விளக்குமாறு; துடைப்பம். புண்ணியம்-நலத்தொண்டு.
 

5

 

அதி. 29- செல்வச் செருக்கு

அழுக்கோ டழிபொருளால் அகங்கொளல் வீணே

325
மணிகள்பல வகைக்கல்லாம் பொன்முதலு
    லோகமின்னு மண்ணாங் கட்டி
துணிபட்டா டைகள்பருத்தி நூல்பூச்சிக்
    குடர்நாயின் தோலு ரோமம்
அணிபுழுகு கத்தூரி முதலியபூ
    னையின்மலம்பா லாவி ரத்தந்
தணிவில்தேன் வண்டெச்சில் இவைசெல்வ
    மெனச்செருக்கல் தகுமோ நெஞ்சே.
 

நெஞ்சே! ஒன்பது வகையாக வழங்கும் மணிகள் கற்களாம். பொன் முதலியன மின்னுகின்ற மண்ணாங்கட்டிகள். துணி பட்டு முதலியன பருத்திநூல் பூச்சிக்குடர் நாயின்தோல் விலங்கு முதலியவற்றின் மயிர்கள். அணியப்படும் புனுகு கத்தூரி