பக்கம் எண் :

153

 செல்வச் செருக்கு
 
 

முதலியன பூனையின் அழுக்கு. பால் ஆவின் குருதி. சிறந்த தேன் வண்டின் எச்சில். இப் பொருள்களையே நிலையான செல்வமென்று கருதி வீண் பெருமை கொள்ளுதல் தகுமோ?

 

மணி-இரத்தினம். புழுகு-புனுகு. ஆ-பசு. செருக்கல்-வீண் பெருமை கொள்ளுதல்.

 

1

 

தேரின் மணியுங்கல் செருக்குறல் வீணே

326
செங்கல்வெண்கல் கருங்கல்லை நவமணிக
    ளெனச்செல்வர் சேர்ப்பார் யாமுஞ்
செங்கல்வெண்கல் கருங்கல்லைச் சேர்த்திட்டோ
   மிருவர் கல்லுஞ்சீர்தூக் குங்கால்
நங்கல்லே யிடையதிகம் எங்கணுமுண்
   டெதிர்ப்போரை நாசஞ் செய்யும்
பங்கமுறச் செல்வர்நம்மின் மிக்கோரென்
   றகங்கரிக்கும் பான்மை யென்னே.
 

மாணிக்கம் வைரம் நீலம் முதலிய கற்களைச் செல்வர்கள் மணிகள் எனச் சேர்ப்பர். யாமும் செங்கல் வெள்ளைக்கல் கருங்கல் இவற்றைச் சேர்த்து வைத்திருக்கிறோம். இருவர் கற்களையும் தராசிலிட்டு நிறுத்துப் பார்க்குமிடத்து நம்முடைய கல்லே எடை மிகுதியாக இருக்கும். எல்லா இடங்களிலும் கிடைக்கும். அம்மட்டுமன்று. எதிர்ப்போரையும் அழிக்கும். ஆயின், செல்வர்கள் நாணமுறல் வேண்டும். செருக்குக்கொள்ளும் தன்மை என்னவாகும்?

 செங்கல்-மாணிக்கம். வெண்கல்-வைரம். கருங்கல்-நீலம். செங்கல்-சுட்டமண். வெண்கல்-பாறைக்கல். கருங்கல்-மலைக்கல். சீர்-தராசு. நாசம்-அழிவு. பங்கம்-நாணம். அகங்கரித்தல்-செருக்குறல். பான்மை-தன்மை.
 

2

 

வேறு

சுமை எருதுபோல் செல்வச் செருக்குறல் துரிசே

327
இடையிற்கோ வணமுமின்றி யிங்குதித்தோ மவ்வாறே
கடையில்வெறுங் கையோடுங் கழிகுவ நடுவிற்சேரும்
உடைமையாற் பெருமையென்னோ வூர்க்கெலாம் பொதி சுமக்கும்
விடைதருக் குற்றதென்ன வீண்செருக் குற்றாய் நெஞ்சே.