| நீதிநூல் |
| நாம் இடுப்பில் கோவணமுமில்லாமல் பிறந்தோம். இறக்கும்காலத்தும் அவ்வாறே இறப்போம். நடுவில் சேரும் செல்வத்தால் நெஞ்சமே தற்பெருமை கொள்ளுவது எதற்காக? இப்பெருமை ஊரவர்களுக்கெல்லாம் சுமை சுமக்கும் எருது செருக்குறுதலை யொக்கும். |
| இடை-இடுப்பு. உதித்தல்-பிறத்தல். கடை-இறப்பு. உடைமை-செல்வம். பொதி-சுமை. விடை-எருது; காளை. வீண்செருக்கு-தற்பெருமை. |
| 3 |
| மாறிவரும் செல்வத்தால் செருக்குறல் வசையே |
328 | சுழல்சக டக்கால்போலுந் தோன்றியே யழிமின்போலும் அழன்மன வேசைபோலு மருநிதி மேவிநீங்கும் பழமைபோ லதனைநம்பிப் பழியுறச் செருக்கல்மேக நிழலினை நம்பிக்கைக்கொள் நெடுங்குடை நீத்தலொப்பே. |
|
| உருளும் வண்டியுருளையின் கால்போலவும், தோன்றி மறையும் மின்னைப்போலவும், நச்சுள்ளமுடைய பொதுமகள் போலவும் செல்வம் பொருந்தி நீங்கும் அச் செல்வத்தை அழியாதிருக்குன்மென்று நம்பி வசை பெருகும்படி தற்பெருமை கொள்ளுதல், மேகத்தின் நிழலை நம்பிக் கையிலுள்ள பெரிய குடையை நீக்கிவிடுவதை யொக்கும். |
| சகடம்-வண்டியுருளை. அழியும்-மறையும். அழல்-நஞ்சு. வேசை-பொதுமகள். பழைமை-தொன்மை; அறிவின்மை. பழி-வசை. ப்னீத்தல்-நீக்கல். |
| 4 |
| வேறு | செல்லும்பேர்ச் செல்வத்தால் செருக்குறல் நெறியன்று |
|
329 | தரித்திரந் தரித்திர மென்னுந் தாரணி சிரித்திடச் செல்வமே செல்வ மென்னுமிச் சரித்திர முணர்ந்துமே தரையிற் பொன்னெமக் குரித்தெனச் செருக்குத லுரனன் றுள்ளமே. |
|
| நெஞ்சமே! உலகம் நகை செய்ய வறுமையாகிய தரித்திரம் நிலைப்பின்மையாகிய தரித்திரமென்று சொல்லும். பொருளாகிய செல்வமும் நீங்குதலாகிய செல்வம் என்று சொல்லும். இவ்வுண்மை உணர்ந்தும் `உலகில் செல்வம் நமக்குரியதுழு என்று தற்பெருமை கொள்ளுதல் அறிவுடைமை ஆகாது. |