பக்கம் எண் :

155

 செல்வச் செருக்கு
 
 

தரித்திரம்-வறுமை. தரித்திரம்-சென்று விடுவோம். செல்வம்-பணம்; பொருள். செல்வம்-நீங்குவம். உரன்-உடைமை.

 

5

 

செருக்குவருங்கால் செல்வம் அழியும்

330
நாசமாங் காலமே நண்ணு முன்னிறகு
ஈசலுக் கெய்தலும் இரியு முன்னமே
தேசது மிகுத்தொளிர் தீபம் போலவும்
நீசர்தஞ் செருக்கினா னிதியி ழப்பரே..
 

ஈயலுக்கு அழிவுகாலம் வரும்பொழுது முன் இறகு முளைக்கும். விளக்கு அணையப்போகும் பொழுது கொழுந்துவிட்டு எரியும். இவைபோல தீச்செயல் புரியும் கீழோர் செல்வம் அழிவெய்தும்பொழுது அவர்களுக்குச் செருக்கு உண்டாகும்.

  நாசம்-அழிவு. இரியும்-கெடும். தீபம்-விளக்கு. நீசர்-கீழோர்.
 

6

 

வேறு

செல்வம் அகன்றபின் செருக்கினர் நிலையென்?

331
செழித்திடுநாளினிற் செருக்குற்றாய்
கழித்துணைமா நிதிகைநீங்கிற்
பழித்திடுமுலகின் முன்பரிவின்றி
விழித்திடலெப்படி வினைநெஞ்சே.
 

தீவினை நெஞ்சே! பெரும்பொருள் வளமாக இருக்குங்காலத்து (நல்லது செய்யாது) தற்பெருமை கொண்டாய். அதனால் அப்பொருள் உன்னைவிட்டு நீங்கும். நீங்கியகாலத்துப் பழித்துக் கொண்டிருக்கும் உலகவர்முன் வருத்தமின்றித் தோன்றுவது எவ்வண்ணம்?

  மாநிதி-பெரும்பொருள். செழிப்பு-வளம். பரிவு-வருத்தம். எப்படி-எவ்வண்ணம். வினை-தீவினை.
 

7

 

------