| |
| அதி. 30- தீயரைச் சேராமை |
| தீயவர் பலரும் தீயரைச் சேர்வர் |
332 | செழுமல ரிடைமது சிறையளி நுகரும் முழுவிட மதுபெறு முனிவுடை யரவம் பழுதறு மறநிலை பயிலுவர் சிலரே வழுவய லவரிட மருவுவர் பலரே. |
|
| சிறந்த பூக்களிலுள்ள தேனை வண்டுகள் உண்ணும். சீறும் அரவமும் முழு நஞ்சினையே பெறும். குற்றமற்ற நன்னெறி நிற்பாருடன் சிலரே பழகுவர். குற்றமுடைய தீநெறி யொழுகுவோரிடம் பலர் கூடுவர். |
| அளி-வண்டு. முனிவு-சீற்றம். வழு-குற்றம். மருவுவர்-கூடுவர். |
| 1 |
| சாரினும் கீழ்கள் தம்நிலை மாறா |
|
333 | கரிநிற முறம்வெளி றுடைகரி யணுகின் சொரிகரி கலையுறு சுசியினை யுறுமோ பெரியவர் குணநிலை பெறலரி தறமே யிரிகல ரொடுகல வறவுறும் இழிபே. |
|
| வெண்மையான ஆடை கரியைச் சார்ந்தால் தன்னிறம் மாறிக் கருமையாகிவிடும். ஆனால் கரி அவ் வாடையைச் சார்ந்ததனால் தன் கருமை மாறி வெண்மையாவது இல்லை. அதுபோல், கீழ்மக்கள் மேலோரைச் சேர்ந்தாலும் மேன்மை யடைவது இல்லை. ஆனால் மேலோர் கீழோரைச் சேரின் இழிபினை எய்துவர். |
| சுசி-வெள்ளை. இரி-கெடு. கலர்-கீழோர். |
| 2 |
| சேரிடத்தால் சிறப்பிழியு யாரையும் சேரும் |
334 | மனிதர்கோள் மருவுநர் தமைக்கொண் டொதுவர் புனிதமில் இடையின்கீழ் பொருவில் வாசத்தீங் கனியையுந் தள்ளுவர் கயவர் தம்மைச்சேர் இனியநற் குணத்தரும் இகழ்ச்சி கொள்வரே. |
|
| மக்கள் யாருடன் கூடுகின்றார்களோ அவர்கள் பெறும் மதிப்பையே பெறுவர். மணமுள்ள இனிய கனியும் தூய்மையில்லாத |