பக்கம் எண் :

158

  நீதிநூல்
 
 

நல்லார் பொல்லார் எனும்பேர் சார்பால் நண்ணும்

337
பாரினிற் பிறந்தபோ தெவரும் பண்பினார்
பூரிய ரெனப்பெயர் பூண்ட தில்லையால்
சீரிய ரென்னலுந் தீய ரென்னலுஞ்
சேரினத் தியல்பினாற் சேர்ந்த நாமமே.
 

உலகில் பிறந்த யார்க்கும் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் பெயர் ஏற்பட்டதில்லை. நல்லவர் தீயவர் என்னும் பெயர் அவரவர் சேர்ந்த இனத்தினால் உண்டாயது.

  பண்பினார்-உயர்ந்தோர். பூரியர்-தாழ்ந்தோர். சீரியர்-நல்லவர். நாமம்-பெயர்.
 

6

 

கயவரைச் சார்வதால் கணக்கிலாத் தீமையாம்

338
கயவரைச் சேர்ந்தவன் கலந்த போதவர்
செயலினை யெண்ணுவன் தினஞ்செ லச்செல
மயன்மிகுந் தவர்செயன் மகிழ்ந்த னுட்டிப்பன்
இயவரைச் சேர்தல்போல் இல்லைத் தீமையே.
 

கீழ்மக்களைச் சேர்ந்தவன் சேர்ந்தபொழுது அவர் செயலை யிழிபாக நினைப்பான். நாளேற நாளேற மயங்கி அவர் செயலை மகிழ்ந்து கைக்கொள்வன். ஆதலால், கீழ்மக்களைச் சேர்தல்போல் பெருந்தீமை வேறொன்றும் இல்லை.

 கயவர்-கீழ்மக்கள். தினம்-நாள். இயவர்-கீழோர்.
 

7

 

------