| |
| அதி. 31-பிழை பொறுத்தல் |
| நின்போற் பிறர் செய்யிற் சினப்பது நெறியோ |
339 | எப்பிழைக்கா நீபிறரைச் சினந்தவர்க்கின் னாவியற் றவெண்ணி னாயோ அப்பிழைநீ செய்திலையோ வுன்னைப்போ லவர்பிழைக்க லாகா தோமா வெப்பமுற நாணிலையோ நீயொருவன் பிழைபுரிய விண்வேந் தன்கை ஒப்பமுட னதிகாரம் பெற்றனையோ மனமேநீ யுரைசெய் வாயே. |
|
| நெஞ்சே! நீ பிறரை எப்பிழையின் பொருட்டுச் சினந்து அவர்க்குத் துன்பஞ் செய்யவேண்டுமென்று எண்ணுகின்றாயோ, அப்பிழையை நீ செய்ததில்லையா? உன்னைப்போன்று அறியாமையால் அவர் பிழை செய்தல் ஆகாதா? மிகுந்த சினங்கொள்ள உனக்கு வெட்கம் இல்லையா? நீ யொருவன் மட்டும் பிழைசெய்ய மேலுலக மன்னர் மன்னன் கைச்சாத்து உரிமை பெற்றிருக்கின்றாயோ? சொல்வாயாக. |
| மா-மிக்க. வெப்பம்-சினம். நாண்-வெட்கம். வேந்தன்-மன்னர் மன்னன்; சக்கரவர்த்தி. கையொப்பம்-கைச்சாத்து. அதிகாரம்-உரிமை. |
| 1 |
| ஒப்பில்லாக் கடவுள் ஒருவனே பிழையிலான் |
|
340 | பிழையிலான் கடவுளன்றி மக்களில்தப் பில்லாதார் பிறரு முண்டோ மழையினுமே அசனியுண்டு மதிக்குமோர் மறுவுண்டு மலர்க்கு முள்ளாம் கழையினுமே சக்கையுண்டு கனியினுந்தோல் கொட்டையுண்டு கதிக்குங் காம விழைவினான் மறம்புரிதல் நரர்க்கியல்பா தலினவரை வெறுக்கொண் ணாதே. |
|
| கடவுள் ஒருவரே குற்றம் இல்லாதவர். மக்களில் குற்றம் இல்லாதவர் இலர். மழைக்கு இடியாகிய குற்றமுண்டு. திங்கட்கு |