| நீதிநூல் |
| மறு இருக்கின்றது. மலருக்கு முள்ளிருக்கின்றது. கரும்புக்குச் சக்கை இருக்கின்றது. இனிய தீம்பழத்துக்கும் தோலும் கொட்டையும் உண்டு. மிகுந்த இன்ப ஆசையால் தீமைசெய்தல் மக்கட்கு இயல்பு. ஆதலால் அவரைத் தீயோர் என்று வெறுத்தல் ஆகாது. |
| அசனி-இடி. கழை-கரும்பு. கதிக்கும்-மிகும். காமம்-இன்பம். மறம்-தீமை. நரர்-மக்கள். வெறுப்பு-விருப்பமின்மை. |
| 2 |
| குற்றத்தைப் பொறுத்தல் அறிவோர் குணமே |
341 | நாவையே கடித்ததெனப் பல்தகர்க்கும் பேருளரோ நடக்கும் வேளை பூவையே பொருவுகழல் சருக்கியதென் றதைக்களை வோர்புவியி லுண்டோ காவையா ருலகமெனும் பேருடலி னவயவம் போல்கலந்த சீவர் தாவையே செய்யினுமிக் கறிவுடையோர் கமைசெய்தல் தகுதி யாமால். |
|
| பல் நாக்கைக் கடித்துவிட்டதென்று அதனை உடைப்பவர் இல்லை. பூப்போன்ற கழலணிந்த அடி நடக்கும்போது வழுவிவிட்டதென்று அதனை வெட்டுவார் இலர். சோலைகள் சூழ்ந்த உலகமாகிய பெரிய உடம்பினுக்கு உறுப்புப்போல் கூடியுறையும் மக்கள் குற்றம் செய்யினும் சிறந்த அறிவுடையார் பொறுத்தல் முறைமையாகும். |
| தகர்த்தல்-உடைத்தல். சருக்கல்-வழுவுதல். கா-சோலை. கமை-பொறுமை. வேளை-பொழுது. |
| 3 |
| இகழ்ந்தார் தமக்கும் இனியவே இயற்றுக |
|
342 | உனையொருவ ரிகழ்ந்தனரே லேதுக்கா விகழ்ந்தனரென் றுன்னி யுன்பால் தினையளவு தப்புளதே லதைநீக்காய் தப்பின்றேற் சினமு றாதே கனைகழையை வேம்பென்னிற் கழைக்குமோர் குறையுண்டோ கல்லின் மோதித் தனையுடைப்போர்க் குணவுதரும் தேங்காய்போ லெவர்க்குநன்மை தனைச்செய் நெஞ்சே. |
|