| பிழை பொறுத்தல் |
| நெஞ்சே! உன்னை ஒருவர் இகழ்ந்தாரானால், அவர் எதன்பொருட்டு இகழ்ந்தாரென்று நீ உன்னிடமே நினைத்துப் பார். உன்பால் குற்றம் தினையளவு இருப்பினும் அதை வருந்தியும் நீக்கிவிடு. குற்றமில்லையானாலும் இகழ்ந்ததற்காகச் சினம் கொள்ளாதே. செறிந்த கரும்பினை வேம்பென்று சொல்லுவதால் கரும்புக்கு ஏதாவது குறையுண்டாகுமா? கல்லின்மேல் அடித்து உடைத்தாலும் தேங்காய் உண்ணும் பருப்பினைத் தருதல்போல் இகழ்ந்தவர்கட்கு நன்மையே செய். |
| கனை-செறிவு. |
| 4 |
| தீங்கு செய்வோர்க்கும் நன்மையே செய்க |
343 | தீதொருவர் செய்தனரென் றதற்கெதிராய் நீயவர்க்கோர் தீங்கு செய்யின் சாதுநீ யவர்தீய ரென்பதற்குக் கரியென்ன சக்கி லாதார் ஓதவிட முண்ணின்விழி யுடையாரு முண்ணுவரோ வுலப்பில் செந்நெல் சேதமுற அவைத்திடுவோர்க் குணவாதல் போனலமே செய்வாய் நெஞ்சே. |
|
| நெஞ்சே! உனக்கு ஒருவர் தீங்குசெய்தார் என்று நீ அவர்க்கு ஒரு தீங்கு செய்தால் நீ நல்லவன் என்றும் அவர் தீயவர் என்றும் வேறுபடுத்துக் கூறுவதற்குச் சான்று என்ன இருக்கின்றது? கண்ணில்லாதவர் சாவினைத் தரும் நஞ்சினை உண்டார்களானால், கண் உடையவர்களும் உண்பார்களோ? கெடாத செந்நெல்லை உமி நீங்குதலாகிய கேடெய்தும்படி குற்றுவோர்க்கு அந்நெல் உணவாகி நன்மை செய்வதுபோன்று தீங்கு செய்வார்க்கும் நன்மையே செய். |
| சாது-நல்லவன். கரி-சான்று. சக்கு-கண். ஓதம்-குளிர்; சாவு. அவைத்திடுவோருக்கு-குற்றுவோருக்கு. |
| 5 |
| தெய்வம் இரங்கல் நோக்கித் தீயவர்க்கு இரங்குக. |
|
344 | நல்லவர்தீ யவரென்னா தெவரையுமே புவிதாங்கு நனிநீர் நல்குஞ் செல்லருண னொளிபரப்புங் கால்வீசு மந்தரமுஞ் சேரு மொப்பொன்று |
|
| நீ.-11 |